தெல‌ங்கானா: 12 ச‌ட்டம‌ன்ற உறு‌ப்‌பின‌ர்க‌ள் ‌விலக‌ல் கடித‌ம் ஏ‌ற்பு

தனி தெலுங்கானா குறித்து ஆய்வு நடத்த அமைக்கப்பட்டுள்ள ஸ்ரீகிருஷ்ணா குழுவின் வரையறைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து தெலுங்கானா பகுதியைச் சேர்ந்த 12 சட்டமன்ற உறுப்பினர்க‌ளி‌ன் பதவி விலகல் கடித‌ம் ஏ‌ற்று‌‌க் கொ‌‌ள்ள‌ப்ப‌ட்டு‌ள்ளதாக அவை‌த் தலைவ‌ர் ‌கிர‌ன் குமா‌ர் தெ‌ரி‌‌வி‌த்து‌ள்ளா‌ர்.

ஆனா‌ல் கா‌ங்‌கிர‌ஸ், ‌பிரஜா ரா‌ஜ்‌‌ஜிய‌ம் ஆ‌கிய ‌க‌ட்‌சிகளை சே‌ர்‌ந்த உறு‌ப்‌பின‌ர்க‌ளி‌ன் ‌விலக‌ல் கடித‌ம் ப‌ரி‌சீலனை‌யி‌ல் இரு‌‌ப்பதாகவு‌ம் அவ‌ர் கூ‌றியு‌ள்ளா‌ர்.

ஆந்திராவில் உள்ள தெலங்கானா பகுதியை தனி மாநிலம் ஆக்க வேண்டும் என்று, தெலங்கானா ராஷ்டிர சமிதி கட்சி கோரி வருகிறது. இந்த கோரிக்கையை வற்புறுத்தி அக்கட்சியின் தலைவர் சந்திரசேகர ராவ், சாகும் வரை உண்ணாவிரதம் மேற்கொண்டதை அடுத்து, “தெலங்கானா மாநிலம் அமைக்க நடவடிக்கைகளை எடுப்போம்” என்று மத்திய அரசு அறிவித்தது.

இதைத்தொடர்ந்து, தெலங்கானா மாநிலம் அமைப்பதற்காக சாத்திய கூறுகள் பற்றி ஆராய, நீதிபதி கிருஷ்ணா தலைமையிலான கமிட்டியை மத்திய அரசு அறிவித்தது. இந்த கமிட்டி இந்த ஆண்டு இறுதிக்குள் தனது அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிடப்பட்டு உள்ளது.

நீதிபதி கிருஷ்ணா கமிட்டி, தெலங்கானா மாநிலம் அமைப்பதற்கான காலத்தை தள்ளிப்போடும் ஒரு அறிவிப்பே தவிர, அதனால் பலன் ஏற்பட போவது இல்லை என்று தெலங்கானா ராஷ்டிர சமிதி கூறுகிறது. எனவே மத்திய அரசை கண்டித்து, போராட்டத்தை தீவிரப்படுத்தப்போவதாக தெலுங்கானா ராஷ்டிர சமிதி அறிவித்தது.

இத‌னிடையே நேற்று தெலங்கானா ராஷ்டிர சமிதி கட்சியை சேர்ந்த 10 ச‌ட்டம‌ன்ற உறு‌ப்‌பின‌ர்கள், காங்கிரசை சேர்ந்த 2 உறு‌ப்‌பின‌ர்கள், பாரதீய ஜனதா, தெலுங்கு தேசம், பிரஜா ராஜ்ஜியம் ஆகிய கட்சிகளை சேர்ந்த தலா ஒரு உறு‌ப்‌பின‌ர்க‌ள் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்தன‌ர். த‌ங்க‌‌ள் ‌விலக‌ல் கடிதங்களை அவை‌த் தலைவ‌ர் கிரன் குமாரிடம் கொடுத்தனர்.

இ‌ந்த ‌நிலை‌யி‌ல் 12 சட்டமன்ற உறுப்பினர்க‌ளி‌ன் பதவி விலகல் கடித‌ம் ஏ‌ற்று‌க் கொ‌ள்ள‌ப்ப‌ட்டு‌ள்ளதாக அவை‌த் தலைவ‌ர் ‌கிர‌ன் குமா‌ர் தெ‌ரி‌‌வி‌த்து‌ள்ளா‌ர். மேலு‌ம் கா‌ங்‌‌கிர‌ஸ், ‌பிரஜா ரா‌ஜ்‌‌ஜிய‌ம் ஆ‌கியோ‌ரி‌ன் ‌விலக‌ல் கடித‌ம் ப‌ரி‌சீலனை‌யி‌ல் இரு‌‌ப்பதாகவு‌ம் அவ‌ர் கூ‌றியு‌ள்ளா‌ர்.

ஆ‌ந்‌திரா ச‌ட்ட‌ப்பேரவை‌யி‌‌ன் ப‌ட்ஜெ‌ட் கூ‌ட்ட‌ம் இ‌ன்று கூடு‌கிறது. அ‌ப்போது தெல‌ங்கானா ‌பிர‌ச்சனை பெரு‌ம் புயலை ‌‌கிள‌ப்பு‌ம் எ‌ன்று எ‌தி‌ர்பா‌ர்‌க்க‌ப்படு‌கிறது.

Source & Thanks ; tamil.webdunia

Leave a Reply

Your email address will not be published.