இந்திரா கொலையாளிகள் தியாகிகளாக அறிவிக்கப்பட்டு நியூசி. குருத்வாராவில் கெளரவம்

வெலிங்டன்: மறைந்த பிரதமர் இந்திரா காந்தியை சுட்டுக் கொன்ற பியாந்த் சிங், சத்வந்த் சிங், கேகர் சிங் ஆகியோரை தியாகிகளாக அறிவித்து நியூசிலாந்தில் உள்ள சீக்கிய குருத்வாராவில் கெளரப்படுத்தப்பட்டுள்ளனர்.

இந்திரா காந்தி 1984-ம் ஆண்டு தனது மெய்காவலர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். அவர்களை பியாந்த் சிங், சத்வந்த் சிங், கேகர் சிங் ஆகியோர் துப்பாக்கியால் சரமாரியாக சுட்டனர்.

இதில் அவரது உடலில் சுமார் 30 குண்டுகள் பாய்ந்து படுகாயமடைந்தார் இந்திரா. பின்னர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டபோதும், ரத்தத்தை பெருமளவில் (ஓ நெகட்டிவ்) இழந்ததால், அந்த ரத்தம் கிடைக்காததால் உயிரிழந்தார் இந்திரா காந்தி.

இந்திராவைக் கொன்ற சத்வந்த் சிங், பியாந்த் சிங் ஆகியோரை பாதுகாப்புப் படையினர் சுட்டுக் கொன்றனர். கேகர் சிங் உயிருடன் பிடிக்கப்பட்டார். பின்னர் அவர் மீது வழக்கு தொடரப்பட்டு விசாரணைக்குப் பின்னர் தூக்கிலிடப்பட்டார்.

இந்த நிலையில் இந்த மூன்று பேரையும் நியூசிலாந்தில் உள்ள ஆக்லாந்து நகரில் உள்ள சீக்கிய குருத்வாராவில், தியாகிகளாக அறிவிக்கப்பட்டு கெளரவிக்கப்பட்டுள்ளனர்.

அவர்களின் புகைப்படங்கள் குருத்வாராவில் வைக்கப்பட்டு மாலை அணிவித்து மரியாதையும் செய்யப்பட்டது.

இதுகுறித்து குருத்வாரா நிர்வாகிகள் கூறுகையில், இந்திராவை கொன்றவர்கள் மதத்துக்காக தங்கள் உயிரை விட்டுள்ளனர். எனவே அவர்களை தியாகிகளாக நினைவு கூர்ந்துள்ளோம் என்று தெரிவித்துள்ளனர்.

Source & Thanks : thatstamil

Leave a Reply

Your email address will not be published.