சத்தீஷ்கர் மாநிலத்தில் ரூ.500 கோடிக்கு சொத்து குவித்த ஐ.ஏ.எஸ். அதிகாரி “சஸ்பெண்டு”

சத்தீஷ்கர் மாநிலத்தை சேர்ந்த மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரி பி.எல்.அகர்வால். மாநில வேளாண்மை துறை செயலாளராக உள்ளார். கடந்த 4-ந்தேதி அகர்வால் மற்றும் அவரது உறவினர்கள் வீடுகளில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தினார்கள்.

அப்போது அவர் வருமான வரி ஏய்ப்பு செய்து இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவரது சொத்து மதிப்பு ரூ.500 கோடியாகும். அவருக்கு 220 வங்கிகளில் கணக்கு இருப்பது தெரியவந்தது. அதில் ரூ.40 கோடி பணம் இருந்தது.

இதற்கிடையே ரூ.500 கோடிக்கு மேல் சொத்து குவித்த அகர்வாலை சத்தீஷ்கர் அரசு நேற்று இரவு “சஸ்பெண்டு” செய்தது. இது தொடர்பாக வழக்கு மாநில குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளது.

இதேபோல மத்திய பிரதேசத்திலும் வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகளான அரவிந்த், டினு ஜோஷி ஆகியோரும் சஸ்பெண்டு செய்யப்பட்டுள்ளனர்.

கணவன்-மனைவியான இருவரிடமும் இருந்து வருமான வரித்துறை அதிகாரிகள் ரூ.3 கோடி ரொக்கப்பணம், ரூ.50 லட்சம் நகை, ரூ.5 லட்சம் மதிப்புள்ள வெளிநாட்டு மது, ரூ.7 லட்சம் வெளிநாட்டுப்பணம், இன்சூரன்சில் ரூ.3 கோடிக்கு முதலீடு செய்த ஆவணம் ஆகியவற்றை கைப்பற்றி இருந்தனர்.

Source & Thanks : maalaimalar

Leave a Reply

Your email address will not be published.