ஆம்பிவேலி சிட்டி – மும்பை விமான போக்குவரத்து துவக்கம்

posted in: வர்த்தகம் | 0

ஆம்பி வேலி சிட்டி: ஆம்பி வேலி சிட்டி மற்றும் மும்பை இடையே வாரத்திற்கு ஆறு விமான போக்குவரத்து சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இது குறித்து வெளியிடப்பட்ட செய்தி: மகாராஷ்டிராவைச் சேர்ந்த இரண்டு பெருநகரங்களான மும்பை மற்றும் புனே இடையே அமைந்துள்ளது ஆம்பி வேலி சிட்டி. இந்த ஆம்பி வேலி சிட்டி மற்றும் மும்பை இடையே, வாரத்திற்கு ஆறு விமான போக்குவரத்து சேவை அறிமுகப்படுத்தப்பட்டது.

இந்த போக்குவரத்து சேவை, கடந்த 5ம் தேதி துவங்கியது. இந்நிகழ்ச்சியில், மத்திய விமான போக்குவரத்துத் துறை அமைச்சர் பிரபுல் படேல், சகாரா இந்தியா பரிவார் நிறுவனத்தைச் சேர்ந்த சுப்ரதா ராய் மற்றும் ஆம்பி வேலி சிட்டி தலைவர் சீமன்டோ ராய் ஆகியோர் கலந்து கொண்டனர். இதன் மூலம், ஆம்பி வேலி சிட்டியில் இருந்து 22 நிமிடங்களில், மும்பையை அடைந்து விடலாம். இந்த விமான போக்குவரத்து சேவை மும்பை மற்றும் ஆம்பி வேலி சிட்டி ஆகிய இடங்களில் பணியாற்றுபவர்களுக்கு பயனளிப்பதாக இருக்கும். இவ்வாறு அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.

Source & Thanks : dinamalar

Leave a Reply

Your email address will not be published.