அ.தி.மு.க., வுடன் கூட்டணி இல்லை : காங்., உறுதி

புதுடில்லி : அ.தி.மு.க., வுடன் கூட்டணி இல்ல‌ை என காங்கிரஸ் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. தமிழகத்தில் சட்டசபை தேர்தல் 2011ல் நடைபெறவிருக்கும் நிலையில் அ.தி.மு.க., – காங்கிரசுடன் கைகோர்க்கும் என பரபரப்பாக பேசப்பட்டது.

இந்நிலையில் இது குறித்து கருத்து தெரிவித்த காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ஷகீல் அகமது கூறுகையில் : காங்கிரஸ் – அ.தி.மு.க., வுடன் கூட்டு வைத்துக்கொள்ளும் என கூறப்படுவது வெறும் அவதூறு என்றார். தி.மு.க., கூட்டணி நம்பகத்தன்மை வாய்ந்தது. மத்திய அரசிலும், மாநில அரசிலும் தி.மு.க., வுடன் வலுவான நட்புறவு இருக்கிறது. எனவே கூட்டணியில் மாற்றம் என்ற பேச்சுக்கே இடமில்லை. காங்கிரசும் – தி.மு.க., வும் இணைந்து சிறப்பாக செயலாற்றி வருகிறது. கடந்த 2 லோக்சபா தேர்தலிலும் காங்கிரசுடன் -தி.மு.க., கூட்டணியில் இருந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. எனவே எங்கள் உறுவு மிகவும் பலமாக இருக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.

முன்னதாக நேற்று காங்கிரசுடனான கூட்டணி குறித்து பேசிய அ.தி.மு.க., பொதுச்செயலாளர் ஜெயலலிதா காங்கிரசுடன் கூட்டு சேர்வதில் தனக்கு ஆட்சேபனை ஏதும் இல்லை என கூறியிருந்தார். மக்கள் மாற்றத்தை விரும்புவதாக குறிப்பிட்டிருந்தார். தி.மு.க., செயல்பாட்டில் மக்கள் மட்டுமல்ல சில காங்கிரஸ் பிரமுகர்களும் எரிச்சலடைந்துள்ளதாக சுட்டிக்காட்டிய அவர் கூட்டணி குறித்த இறுதி முடிவு காங்கிரஸ் தலைவரிடத்தில் விட்டுவிட்டதாக தெரிவித்தார்.

Source & Thanks : dinamalar

Leave a Reply

Your email address will not be published.