அமர்சிங் – ஜெயபிரதா நீக்கம்

லக்னோ: முலாயம் சிங் தலைமையிலான சமாஜ்வாடி கட்சியில் இருந்து பொதுசெயலாளராக இருந்த அமர்சிங் மற்றும் அவரது ஆதரவு எம்.பி., நடிகை ஜெயப்பிரதா ஆகியோர் கட்சியில் இருந்து நீக்கப்பபட்டுள்ளனர்.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் பொதுச்செயலர் பதவியில் இருந்து விலகுவதாக அமர்சிங் அறிவித்தார். தனது உடல்நலம் காரணமாக பொறுப்பில் நீடிக்க முடியவில்லை என்றும் காரணம் தெரிவித்திருந்தார். ராஜினாமா ஏற்கப்படுமா என்ற கேள்வி எழுந்தது. இதற்கிடையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் மாயாவதியை ஆதரித்து பேசியதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.

கட்சியின் பொதுசெயலராக நியமிக்கப்பட்டிருக்கும் மோகன்சிங் நிருபர்களிடம் கூறுகையில் : கட்சியின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்திய அமர்சிங் மற்றும் ஜெயப்பிரதா உள்பட 4 எம்.எல்.ஏ.,க்கள் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். என தெரிவித்தார்.

முலாயம்சிங்கிற்கு நான் நன்றி தெரிவித்தார் அமர்சிங் : நீக்கம் குறித்து நிருபர்களிடம் பேசிய அமர்சிங் கூறுகையில் ; நான் எனது உடல்நலம் காரணமாக கட்சியில் இருந்து விலகுவதாக தெரிவித்தேன். ஆனால் என்னையும் எனக்கு வேண்டியவர்களையும் கட்சியில் இருந்து நீக்கியது துன்பத்திலும் ஒரு இன்பம் . கட்சி தலைவர் முலாயம்சிங்கிற்கு நான் நன்றியை தெரிவித்து கொள்கிறேன். அவர் மீது எனக்கு எப்போதும் உரிய மரியாதை உண்டு . கட்சியின் வளர்ச்சிக்காக நான் கடுமையாக உழைத்தவன் என்பது அனைவருக்கும் தெரியும். பகுஜன் கட்சியிலோ மாற்று கட்சியிலோ சேரும் எண்ணம் எனக்கில்லை இவ்வாறு அவர் கூறினார்.

அமர்சிங்கின் அரசியல் எதிர்காலம் கேள்விக்குறியாகி விட்டது என காங்கிரஸ் விமர்சித்துள்ளது.

Source & Thanks ; dinamalar

Leave a Reply

Your email address will not be published.