இத்தாலி, இந்திய தூதரகத்திற்கு புலிகளின் பெயரில் வெடிப்பொருள் பார்சல்: தமக்கு தொடர்பு இல்லை என விடுதலைப்புலிகள் மறுப்பு

கடந்த 24 சனவரி 2010 அன்று ரோமில் உள்ள இந்திய தூதரகத்திற்கு ஒரு வெடிப்பொருள் பொதி தபால் ஊடாக வந்ததாகவும் அது விடுதலைப்புலிகளின் பேரில் வந்ததாகவும் வெளியான செய்திக்கு மறுப்புத் தெரிவித்து இத்தாலிய வெளிவிவகார அமைச்சுக்கு விடுதலைப் புலிகளால் கடிதமொன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் விடுதலைப்புலிகளின் தலைமைச் செயலகம் இத்தாலிய வெளிவிவகார அமைச்சிற்கு அனுப்பியுள்ள கடிதம் வருமாறு:-

தலைமைச் செயலகம்,
தமிழீழ விடுதலைப் புலிகள்,
தமிழீழம்.
27.01.2010.

கடந்த 24 சனவரி 2010 அன்று ரோமில் உள்ள இந்திய தூதரகத்திற்கு ஒரு வெடிப்பொருள் பொதி தபால் ஊடாக வந்ததாகவும் அது விடுதலைப்புலிகளின் பேரில் வந்ததாகவும் வெளியான செய்திக்கு மறுப்புத் தெரிவித்து இத்தாலிய வெளிவிவகார அமைச்சுக்கு விடுதலைப் புலிகளால் கடிதமொன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இந்த விடயத்தில் எமக்கு எந்தத் தொடர்புமில்லை என்பதோடு இச்செயற்பாட்டை வன்மையாகக் கண்டிக்கிறோமென்றும் தெரிவிக்கப்பட்டுள்ள வேளை, இம்மாதிரியான நடவடிக்கைகள் எமது இயக்கத்தின் நற்பெயரைக் கெடுக்கும் நோக்கோடு எதிரியால் திட்டமிட்டு முன்னெடுக்கப்படுகின்றன என்றும் அம்மறுப்புக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

நன்றி.

Source & Thanks : tamilwin

Leave a Reply

Your email address will not be published.