பயங்கரவாதிகளை சமாளிக்க தயாராக இருங்கள் : அந்தோணி

புதுடில்லி : பயங்கரவாத அச்சுறுத்தலை சமாளிக்க இந்திய ராணுவம் தயாராக இருக்க வேண்டும் என மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் அந்தோணி கேட்டுக்கொண்டுள்ளார்.

எல்லையில் பயங்கரவாத ஊடுருவல் கடந்த 2 மாதங்களாக அதிகரித்துள்ளதாக தெரிவித்த அவர், காஷ்மீரில் பயங்கரவாத செயல்கள் உடனுக்குடன் முறியடிக்கப்பட்டு வருவதால் அத்திரமடைந்துள்ள பயங்கரவாதிகள் மேலும் சதிச் செயலில் ஈடுபட முற்படலாம் என எச்சரித்தார். எனவே இந்திய படைகள் எந்த மாதிரியான அச்சுறுத்தலையும் சமாளிக்கும் சக்தியோடு எப்போதும் த‌யாராக இருக்க வேண்டும் என வலியுறத்தினார்.

காஷ்மீரில் ஊடுருவல் : குடியரசு தின விழாவை முன்னிட்டு ஜம்முவில் உச்சகட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. எல்லையில் ரோந்துப் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அப்துலியான் செக்டாருக்கு உட்பட்ட ஆர்.எஸ்.புரா பகுதியில் வேலிகள் அகற்றப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து மாநிலம் முழுவதும் பயங்கரவாதிகள் தேடுதல் வேட்டை முடுக்கி விடப்பட்டுள்ளது. குடியரசு தினத்தை முன்னிட்டு ஜம்முவில் பயங்கரவாதிகள் பெருமளவில் தாக்குதல் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக கிடைத்துள்ள எச்சரிக்கையை அடுத்து கண்காணிப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதாக போலீஸ் ஐ.ஜி., அசோக் குப்தா தெரிவித்துள்ளார்.

Source & Thanks : dinamalar

Leave a Reply

Your email address will not be published.