விடுதலைப்புலிகள் – கருணா பிளவுக்கு தான் பொறுப்பில்லை என ரணில் தெரிவிப்பு

தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பில் இருந்து கருணா வெளியேறுவதற்கு தாம் பின்னால் இருந்து செயற்பட்டதாக வெளியாகும் தகவலை ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க மறுத்துள்ளார்.

ஐரோப்பாவில் தளத்தை கொண்டுள்ள, தொலைக்காட்சிக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இந்தநிலையில் 2005 ஆம் ஆண்டு தமது தோல்விக்கு தமிழீழ விடுதலைப்புலிகளே காரணம் என அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

கருணா, தமிழீழ விடுதலைப்புலிகளில் இருந்து பிரிந்தமையானது அவர்களின் உள்ளகப் பிரச்சினையாகும்.

அது தொடர்பில் தம்மீது குற்றம் சுமத்துவது ஏற்றுக்கொள்ளத்தக்கதல்ல. அவ்வாறு சாட்சியம் இருக்குமானால், அதனை சமர்ப்பிக்குமாறு ரணில் விக்கிரமசிங்க கோரியுள்ளார்.

திருகோணமலை மாவிலாறு பிரச்சினையே, தமிழீழ விடுதலைப்புலிகளுக்கு எதிரான போருக்கான காரணமாகும்.

இந்தநிலையில் இராணுவத்தளபதியாக இருந்த சரத் பொன்சேகா அரசாங்கத்தின் கட்டளைக்கிணங்கவே செயற்பட்டதாக ரணில் விக்கிரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.

Source & Thanks : tamilwin

Leave a Reply

Your email address will not be published.