கொழும்புத் துறைமுகத்தில் பாகிஸ்தான் போர்க்கப்பல்

பாகிஸ்தான் கடற்படையின் போர்க்கப்பல் ஒன்று சிறிலங்காவின் தலைநகர் கொழும்புக்கு வருகை தந்துள்ளது.

‘பிஎன்எஸ் ஷம்ஷீர்’ [PNS Shamsheer] என்ற பாகிஸ்தான் போர்க்கப்பலே தற்போது கொழும்புத் துறைமுகத்தில் தரித்து நிற்கிறது.

நேற்று கொழும்புத் துறைமுகத்தை வந்தடைந்த இந்தப் போர்க்கப்பலுக்கு சிறிலங்கா கடற்படையின் தளபதி வைஸ் அட்மிரல் திசார சமரசிங்க விஜயம் செய்திருந்தார்.

இதன்போது பாகிஸ்தான் போர்க் கப்பலின் கட்டளை அதிகாரி கப்டன் நெய்மத்துல்லாவுடன் Captain Neimatullah அவர் பேச்சுக்களை நடத்தியுள்ளார்.

நல்லெண்ண பயணமாக வந்துள்ள இந்தப் போர்க்கப்பல் சில நாட்கள் கொழும்புத் துறைமுகத்தில் தரித்து நிற்கும் எனத் தெரியவருகிறது.

123 மீற்றர் நீளமும் 1883 தொன் எடையும் கொண்ட இந்தப் போரக்கப்பலில் 14 அதிகாரிகள் உட்பட 202 பாகிஸ்தான் கடற்படையினர் பணியாற்றுகின்றனர்.

Source & Thanks : puthinappalakai

Leave a Reply

Your email address will not be published.