உலகம் >> எய்ட்ஸ் பாதித்த தாய் குழந்தைக்கு பால் தரலாம் எய்ட்ஸ் பாதித்த தாய் குழந்தைக்கு பால் தரலாம்

வாஷிங்டன் : தாய்ப்பால் மூலம் குழந்தைகளுக்கு எய்ட்ஸ் நோய் பரவும் என நம்பப்படுகிறது. இதனால், எய்ட்ஸ் பாதித்த தாய்மார்கள் தாய்ப்பால் கொடுப்பதில்லை. இந்நிலையில், எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்ட தாய், தாய்ப்பால் கொடுப்பதன் மூலம் எய்ட்ஸ் பாதிப்பை தடுக்க முடியும் என ஆய்வில் தெரியவந்துள்ளது.


அமெரிக்காவின் கொலம்பியா யுனிவர்சிட்டியைச் சேர்ந்த லூயிஸ் குன் தலைமையிலான குழுவினர் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்ட தாய்மார்களிடமிருந்து குழந்தைகளுக்கு எச்ஐவி கிருமி பரவுவதை தடுப்பது குறித்த ஆய்வில் ஈடுபட்டனர். இதன்படி, எச்ஐவி நோயால் பாதிக்கப்படாத தாய்மார்களிடம் ஆய்வு நடத்தப்பட்டது.
4 மாதத்தில் தாய்ப்பாலை நிறுத்திய குழந்தைகளுக்கு உயிரிழப்பு ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிக அளவில் இருந்தது ஆய்வில் தெரியவந்தது. அதேசமயம், 6 முதல் 24 மாதங்களுக்கு தொடர்ந்து தாய்ப்பால் கொடுக்கப்பட்ட குழந்தைகள் உயிரிழப்பதற்கான வாய்ப்பு குறைவாக காணப்பட்டது.
இந்த ஆய்வின் மூலம் நோய் எதிர்ப்பு சக்தியைப் பெறுவதற்கு தாய்ப்பால் மிகவும் அவசியம் என்பது உறுதி செய்யப்பட்டது. குறிப்பாக எய்ட்ஸ் நோயிலிருந்து பாதுகாத்துக் கொள்வதற்கு தாய்ப்பால் முக்கிய பங்கு வகிக்கிறது. எனவே, எய்ட்ஸ் நோயால் தாய் பாதிக்கப்பட்டிருந்தாலும், அன்ட்டி ரெட்ரோவைரல் மருந்தை எடுத்துக் கொண்டு தாய்ப்பால் கொடுக்க வேண்டும். இதனால் குழந்தைக்கு எய்ட்ஸ் நோய் பரவுவது தடுக்கப்படும்.
ÔÔஎங்களுடைய ஆய்வு முடிவை அடிப்படையாகக் கொண்டு, உலக சுகாதார நிறுவனமும் விதிமுறைகளில் திருத்தம் செய்துள்ளது. அதாவது, எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்ட தாய் உரிய மருந்தை உட்கொண்டு தொடர்ந்து தாய்ப்பால் தருவதன் மூலம் எய்ட்ஸ் நோய் குழந்தைக்கு பரவுவதை தடுக்க முடியும் என அது தெரிவிக்கிறதுÕÕ என ஆய்வின் தலைவர் லூயிஸ் குன் தெரிவித்துள்ளார்.

Source & Thanks : dinakaran

Leave a Reply

Your email address will not be published.