எஸ்.ஐ.​ கொலை விவகாரம்: வேடிக்கைப் பார்த்த அமைச்சர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி வழக்கு

posted in: தமிழ்நாடு | 0

சென்னை,​​ ஜன.11:​ திருநெல்வேலியில் கொலை செய்யப்பட்ட சப்}இன்ஸ்பெக்டர் வெற்றிவேல்,​​ உயிருக்குப் போராடியபோது வேடிக்கைப் பார்த்ததாக புகார் எழுந்துள்ள அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக,​​ சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் மணிகண்டன்,​​ உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு விவரம்:

திருநெல்வேலி மாவட்டம் ஆழ்வார்க்குறிச்சி அருகே சப்}இன்ஸ்பெக்டர் வெற்றிவேல் வெடிகுண்டு வீசியும்,​​ அரிவாளால் வெட்டப்பட்டும் ஜனவரி 7}ம் தேதி படுகொலை செய்யப்பட்டார்.

அரிவாளால் கும்பல் வெட்டும்போது,​​ அந்த வழியாக சுகாதார அமைச்சர் பன்னீர்செல்வம்,​​ சுற்றுச்சூழல் அமைச்சர் மொய்தீன்கான் உள்ளிட்டோரின் வாகனங்கள் வந்துள்ளன.

வாகனங்களின் சைரன் ஒலியைக் கேட்ட உடனேயே அக் கும்பல் அங்கிருந்து ​ ஓடிவிட்டது.​ உயிருக்குப் போராடிய சப்}இன்ஸ்பெக்டர் வெற்றிவேலுக்கு 45 நிமிஷங்கள் வரை அமைச்சர்களோ,​​ அதிகாரிகளோ உதவவில்லை.

இதுதொடர்பான காட்சி தனியார் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பப்பட்டதும் நாடே அதிர்ச்சியடைந்தது.​ இந்த விவகாரத்தை மூடி மறைக்கும் விதத்தில் அரசும்,​​ போலீஸôரும் செயல்படுகின்றனர்.

வெற்றிவேல் மீது தாக்குதல் நடத்தியவர்கள் மீது போலீஸôர் துப்பாக்கிச் சூடு நடத்தியதாகவும்,​​ அவரை மருத்துவமனைக்குக் கொண்டு செல்வதில் 10 நிமிஷங்கள் மட்டுமே காலதாமதம் நிலவியதாகவும் போலீஸ் உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

உயர் நீதிமன்றம் இது தொடர்பான விடியோ காட்சிகளைப் பார்வையிட்டு,​​ வெற்றிவேலுக்கு உடனடியாக சிகிச்சையளிக்க முன்வராத அமைச்சர்கள்,​​ அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்.

அதேபோல்,​​ சம்பவ இடத்தில் இருந்த போலீஸôருக்கு தீரச் செயலுக்கான விருது வழங்கும் நடவடிக்கைக்கும் தடை விதிக்க வேண்டும் என்றும் மனுவில் கோரியுள்ளார்.

Source & Thanks : dinamani.

Leave a Reply

Your email address will not be published.