அமெரிக்காவில் அதிசய பிரசவம்

அமெரிக்காவின் கொலராடோ வைத்தியசாலையில் உயிரிழந்து விட்டதாக அறிவிக்கப்பட்ட தாய் ஒருவர் மீண்டும் உயிர்த்தெழுந்துள்ளார்.

பிரசவத்தின் போது உயிரிழந்து விட்டதாக அறிவிக்கப்பட்ட போதிலும் சிறிது நேரத்தின் பின்னர் குறித்த தாய் உயிருடன் இருப்பது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

கிறிஸ்மஸ் அதிசயங்களில் ஒன்றாக இதனை வைத்தியசாலை அதிகாரிகள் வியந்து பாராட்டுகின்றனர்.

குறித்த தாயும் சேயும் சிறந்த உடலாரோக்கியத்துடன் திகழ்வதாகத் தெரிவிக்கப்படுகிறது.

டெர்சி ஹெர்மன்ஸ்டோபர் என்ற கர்ப்பிணித் தாயின் இதயத் துடிப்பு நின்று விட்டதாகவும், அவரது சிசு உயிரற்று இருப்பதாகவும் மருத்துவர்கள் முதலில் அறிவித்தனர்.

கிறிஸ்மஸ் பண்டிகைக்கு முதல் நாள் இந்த அதிசய சம்பவம் இடம்பெற்றதாகத் தெரிவிக்கப்படுகிறது.

குறித்த தாயும் சேயும் எவ்வாறு உயிர் பெற்றார்கள் என்பதனை தாம்மால் விளக்க முடியாதென குறித்த வைத்தியசாலையின் மகப் பேற்று மருத்துவர் டொக்டர் ஸ்டீவன் தெரிவித்துள்ளார்.

4‐5 நிமிடங்கள் வரையில் அவரது இருதயம் செயலிழந்து விட்டதாகவும், சுவாசம் நின்று விட்டதாகவும் மருத்துவர்கள் குறிப்பிடுகின்றனர்.

பின்னர், திடீரென குறித்த தாயும் சேயும் சுவாசிக்கத் தொடங்கியதாகவும் இருவரும் சிறந்த தேகாரோக்கியத்துடன் காணப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இதற்கான மருத்துவ ரீதியான ஏதுக்களை விளக்க முடியவில்லை எனவும், என்ன நேர்ந்தது என்பது குறித்து தொடர்ச்சியாக ஆராய்ந்து வருவதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

Source & Thanks : z9world

Leave a Reply

Your email address will not be published.