இந்தியர்களின் சலூன் கடைகளை மூடும்படி மலேசியாவில் உத்தரவு

கோலாலம்பூர் : இந்திர்கள் நடத்தி வரும் சலூன் கடைகளை மூடும்படி, மலேசியாவில் உள்ள பெனாங் மாகாண அரசு உத்தரவிட்டுள்ளது. இதனால், அங்கு வசித்து வரும் இந்திய முடிதிருத்தும் தொழிலாளர்கள் பெரும் கவலையில் ஆழ்ந்துள்ளனர்.

மலேசியா முழுவதும் மொத்தம் 2,000 சலூன் கடைகள் இந்தியர்களால் நடத்தப்படுகின்றன. இவற்றில், பெனாங் மாகாணத்தில் மட்டும் 700 கடைகள் உள்ளன. முடிதிருத்தும் தொழிலில் மண்ணின் மைந்தர்களுக்கு வேலைவாய்ப்பு கொடுப்பதற்காக, பிற நாடுகளிலிருந்து வந்து சலூன் கடைகள் நடத்தி வருவோரின் பணி அனுமதியை புதுப்பித்துத் தர, பெனாங் மாகாண அரசு மறுத்து வருகிறது. அவர்களின் கடைகளை மூடும்படியும் உத்தரவிட்டுள்ளது. இதனால், கடந்த ஆறு மாதங்களில் மட்டும் 50க்கும் மேற்பட்ட சலூன் கடைகள் மூடப்பட்டுள்ளன. அங்குள்ள இந்திய முடி திருத்தும் தொழிலாளர்கள், பெரும் கவலையில் ஆழ்ந்துள்ளனர்.

இதே போன்ற பிரச்னை, 2004ல் வந்தது என்றாலும், அப்போதைய தமிழ் அமைச்சர் டத்தோ எஸ்.சாமிவேலுவால் அந்த பிரச்னை முடிவுக்கு வந்தது. இந்தியத் தொழிலாளர்கள் பிழைத்தனர்.

பெனாங் மாகாண இந்திய முடிதிருத்துவோர் சங்க கமிட்டி உறுப்பினர் செல்வக் குமரன் இதுபற்றி கூறுகையில்,””இந்த விவகாரம் எங்கள் வாழ்க்கைக்கு மிகப் பெரும் பிரச்னையாக உள்ளது. மனித வள மேம்பாட்டு அமைச்சகம் எங்களுக்கு உதவும் என்று நம்புகிறோம்,” என்றார்.

Source & Thanks : dinamalar

Leave a Reply

Your email address will not be published.