இந்திய கரையோர காவல்துறை பிரிவினர் இருவரை ஸ்ரீலங்கா மீனவர்கள் கடத்திச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய கரையோர காவல்துறை பிரிவினர் இருவரை ஸ்ரீலங்கா மீனவர்கள் கடத்திச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய கடற் பகுதியில் அத்து மீறி மீன் பிடியில் ஈடுபட்ட 7 படகுகளை இந்திய கரையோர காவல்துறை படகுகள் கைப்பற்றியுள்ளன.

இவற்றின் ஒவ்வொரு படகிலும் இரண்டு கரையோர காவல்துறையினர் வீதம் ஏறியதாகவும் அந்த வேளையில் ஒரு படகு கரையோர காவல் துறையினரையும் ஏற்றியவாறு தப்பிச் சென்றுவிட்டதாக தெரியவந்துள்ளது.

இதனை அடுத்து குறிப்பிட்ட இரு கரையோர காவல்துறையினரையும் விடுவிப்பதற்கு இந்திய அரசாங்கம் ஸ்ரீலங்கா அரசாங்கத்தை தொடர்பு கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது இரு கரையோர காவல்துறையினரையும் ஏற்றிச் சென்ற படகு காணமல போயுள்ளதாக அறிவிக்கப்படுகின்றது.

இதனை அடுத்து இரு நாடுகளின் கடற்படைகளும் தெடுதல் நடவடிக்கைளை தீவிரப்படுத்தியதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை குறிப்பிட்ட படகினை ஸ்ரீலங்கா கடற்படையினர் மீட்டுள்ளதாக கடற்படை பேச்சாளர் அறிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா மீனவர்களின் இந்த நடவடிக்கையானது ஸ்ரீலங்கா கடற்படையின் ஒத்துழைப்புடனேயே மேற்கொள்ளப்பட்டிருப்பதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்திய கரையோர காவல்துறையினை எச்சரிக்கும் நோக்கில் ஸ்ரீலங்கா கடற்படையே மீனவர்கள் மூலமாக இந்த கடத்தல் நடவடிக்கையை மேற்கொண்டதாக அந்த ஊடகங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.

Source & Thanks : pathivu

Leave a Reply

Your email address will not be published.