ரூ.150 கோடி முதலீட்டில் தர்மபுரி மாவட்டத்தில் ஹட்சன் புதிய ஆலை

சென்னை: பால் மற்றும் ஐஸ்கிரீம் தயாரிப்பு நிறுவனமான ஹட்சன், தர்மபுரி மாவட்டம் பாலகோடுவில் ரூ.150 கோடி முதலீட்டில் புதிய ஆலையை திறந்துள்ளது.


இது குறித்து இந்நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் சந்திரமோகன் கூறியதாவது:
எங்கள் நிறுவனத்துக்கு தமிழ்நாடு மற்றும் கர்நாடகாவில் 9 ஆலைகள் உள்ளன. இதில் பால், ஐஸ்கிரீம், நெய், பால் பவுடர் ஆகிய பொருட்கள் தயாரிக்கப்படுகின்றன. தர்மபுரி மாவட்டம் பாலகோடுவில் ரூ.150 கோடி முதலீட்டில் புதிய ஆலையை கட்டி உள்ளோம். இந்த தொழிற்சாலை இம்மாத இறுதியில் உற்பத்தியை தொடங்கும்.
இது ஒரு நாளைக்கு 9 லட்சம் லிட்டர் பால் பதப்படுத்தும் திறன் கொண்டது. இதன் மூலம் 250 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கப்படும். இந்த ஆலைக்கு தேவையான பால் அருகில் உள்ள 6க்கும் மேற்பட்ட மாவட்டங்களிலிருந்து பெறப்படும்.
நிறுவனம் சார்பில் தினமும் 3 லட்சம் விவசாயிகளிடமிருந்து 6000 மையங்கள் மூலம் பால் பெறப்படுகிறது. தினமும் 26 லட்சம் லிட்டர் பால் பதப்படுத்துகிறது. 10 லட்சம் லிட்டர் பால் விற்பனை செய்யப்படுகிறது. கடந்த நிதி ஆண்டில் நிறுவனத்தின் மொத்த விற்பனை ரூ.1030 கோடி. அடுத்த நிதி ஆண்டின் இறுதிக்குள் இதை ரூ.1200 கோடி ஆக அதிகரிக்க திட்டமிட்டுள்ளோம்.
இவ்வாறு சந்திரமோகன் தெரிவித்தார்.

Source & thanks : .dinakaran

2 விமர்சனங்கள் to “ரூ.150 கோடி முதலீட்டில் தர்மபுரி மாவட்டத்தில் ஹட்சன் புதிய ஆலை”

  1. viji.s Says:

    Sir i request. The. Job

  2. viji.s Says:

    ஐயா இந்த பணியை எனக்கு வழங்குமாறு வேண்டிக்கொள்கிறேன் by Viji DME..,

Leave a Reply

Press Ctrl+g to toggle between English and Tamil