சூழ்ச்சித் திட்டங்களினால் ஹெலிகொப்டர் விபத்துக்கு உள்ளாகவில்லை : விமானப்படை மறுப்பு

சூழ்ச்சித் திட்டங்களினால் ஹெலிகொப்டர் விபத்துக்கு உள்ளாகவில்லை என சிரேஸ்ட விமானப்படை அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார். ஹெலிகொப்டரில் இடம்பெற்ற இயந்திரக் கோளாறே இந்த விபத்திற்கான காரணம் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்

ஹெலிகொப்டரில் இயந்திரக் கோளாறு ஏற்பட்டுள்ளதாக பயணம் செய்த விமானி ஒருவர் கட்டுப்பாட்டு நிலையத்திற்கு தகவல் அனுப்பி வைத்துள்ளார்.

திடீரென ஏற்பட்ட இயந்திரக் கோளாறு காரணமாக ஹெலிகொப்டர் விபத்துக்கு உள்ளானதாகவும், சில நொடிகளிலேயே வீழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதனால் குறித்த ஹெலிகொப்டரில் பயணித்தோரை காப்பாற்றுவதற்கு எடுக்கப்பட்ட முயற்சிகள் தோல்வியடைந்ததாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை, இந்த விமான விபத்தின் பின்னணில் மர்மம் காணப்படுவதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் அகில விராஜ் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டிருந்மை குறிப்பிடத்தக்கது.

Source & Thanks : tamilwin

Leave a Reply

Your email address will not be published.