வறுமையின் கொடுமையால் ரூ.4000 பணத்துக்கு மகளை விற்ற தந்தை

ஒரிசாவில் நிலவி வரும் வறுமை நிலையால் ரூ.4000 பணத்துக்காக 14 வயது மகளை தந்தையே விற்றக்கொடுமை நடந்த்துள்ளது.


ஒரிசா மாநிலம் சோனாப்பூர் மாவட்டத்தில் உள்ள சலபாதாரா என்ற கிராமத்தை சேர்ந்தவர் பேடாசேத்தி (வயது 54) விவசாய கூலித்தொழிலாளி. இவருக்கு நளினி (வயது 14) என்ற மகள் உள்பட 3 மகள்களும், 3 மகன்களும் உள்ளனர். இவருக்கு போதிய வருமானம் இல்லாததால் குடும்பம் வறுமையில் வாடியது. எனவே மகள் நளினியை விற்க முடிவு செய்தார்.

இதற்காக மத்திய பிரதேசத்தை சேர்ந்த ஒருவரிடம் ரூ.4 ஆயிரத்துக்கு விலைபேசி விற்றார். அவர் நளினியை வீட்டுக்கு அழைத்து சென்று திருமணம் செய்து கொள்வதாக கூறி இருந்தார்.

ஆனால் நளினியிடம இந்த விவரத்தை கூறவில்லை. அங்கிருந்து 45 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள உறவினர் வீட்டுக்கு அழைத்து செல்வ தாக மட்டும் தகவல் கூறி இருந்தனர்.

நளினியை அவர் அழைத்துக்கொண்டு சோனாபூர் சென்றார். அங்கு பஸ்நிலை யத்தில் 2 பேர் காத்திருந்தனர். அவர்களிடம் நளினியை ஒப்படைத்தார். அந்த நபர் விபசார கும்பலிடம் நளினியை விற்று இருக்கிறார்.

அவர்கள் இருவரும் நளினியை அழைத்து செல்ல தயார் ஆனார்கள். அப்போதுதான் நளினிக்கு விஷயம் தெரிந்தது. தன்னை உறவினர் வீட்டுக்கு அழைத்து செல்லவில்லை. வேறு ஏதோ நடக்கிறது என்று உணர்ந்தார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த நளினி சத்தம் போட்டு கதறி அழுதார். உடனே அங்கிருந்த பொதுமக்கள் திரண்டு வந்தனர். அவர்களிடம் நளினி விஷயத்தை கூறினார். அவர்கள் நளினியை அழைத்து செல்ல இருந்த 2 பேரையும் மடக்கி பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.

போலீசார் வழக்குப்பதிவு செய்து 2 பேரையும் கைது செய்தனர். நளினியின் தந்தையும் கைது செய்யப்பட்டார். நளினியை முதலில் வாங்கியவர் தப்பி ஓடிவிட்டார். அவரை தேடி வருகின்றனர்.

Source & Thanks : newindianews.

Leave a Reply

Your email address will not be published.