ரேஷன் கடைகளில் மீண்டும் ரூ.50க்கு மளிகை பாக்கெட்

posted in: தமிழ்நாடு | 0

சேலம் : விலைவாசி உயர்வால் ஏழை மக்கள் பாதிக்கக் கூடாது என்பதற்காக, ரேஷன் கடைகளில் மானிய விலை மளிகைப் பொருள் வழங்கும் திட்டத்தை கடந்த ஆண்டு அக்டோபர் 2ல் தமிழக அரசு அமல்படுத்தியது. மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், மசாலா பொருட்கள், சீரகம், மிளகு, கடலைப்பருப்பு உள்ளிட்ட 10 பொருட்கள் அடங்கிய ஒரு பாக்கெட் ரூ.50க்கு, ரேஷன் கார்டுக்கு தலா ஒன்று வீதம் வழங்கப்பட்டது.


திட்டத்தின் துவக்கத்தில் ஆச்சி மசாலா, சக்தி மசாலா போன்ற முன்னணி நிறுவனங்களின் பொருட்கள் வழங்கப்பட்டதால் மக்களிடையே பெரும் வரவேற்பு ஏற்பட்டது. நாளடைவில், உள்ளூர் நிறுவனங்களின் தயாரிப்புகளை அடைத்து விற்கப்பட்டது. இதனால், பாக்கெட்டுகள் தேக்கம் அடைந்தன.

இதையடுத்து, தரம் இல்லை என கடந்த மாதத்தில் மட்டும் 1 லட்சம் பாக்கெட்டுகளை, சப்ளை செய்த நிறுவனங்களுக்கே அரசு திருப்பி அனுப்பியது.
இந்நிலையில், Ôகலைஞர் ஆட்சியில் மானிய விலையில் மளிகைப்பொருள்Õ என்று அச்சிட்டு கவர்ச்சிகரமான பாக்கெட்டில் மீண்டும் இத்திட்டம் அமலுக்கு வந்துள்ளது. இதற்காக Ôமதர் இண்டியாÕ என்ற நிறுவனத்துடன் அரசு ஒப்பந்தம் செய்துள்ளது. அந்த நிறுவனத்திடம் இருந்து வாங்கிய பொருட்களை ரேஷன் கடைகளுக்கு அனுப்பும் பணி இன்று துவங்குகிறது. ஓரிரு நாட்களில் ரேஷன் கடைகளில் விநியோகிக்கப்பட உள்ளது.

Source & Thanks : dinakaran

Leave a Reply

Your email address will not be published.