ஈழக்கொடியை மீண்டும் உயர்த்துவதற்கு ஒருபோதும் இடமளிக்கமாட்டேன்: சிறிலங்கா அதிபர்

ஈழக்கொடியை மீண்டும் உயர்த்துவதற்கு ஒருபோதும் இடமளிக்கமாட்டேன் என்று சூளுரைத்திருக்கிறார் சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ஸ.

பௌத்த விகாரைகளுக்கு காணி உறுதிப்பத்திரம் வழங்கும் நிகழ்வில் பேசும்போதே அவர் இவ்வாறு சூளுரைத்திருகிறார்.

ஜனாதிபதி செயலகத்தில் நேற்று நடைபெற்ற இநந்நிகழ்வில் அவர் மேலும் தெரிவித்திருப்பதாவது:

ஈழக் கொடியை வீழ்த்துவதற்கு எம்மோடு உறுதுணையாக பௌத்த மதகுருமார்கள் இருந்தனர். அவர்கள் எவருமே இந்த நாட்டில் ஈழக் கொடியைக் காண விரும்பமாட்டார்கள்.

உலகில் எங்காவது ஈழக்கொடி உயர்த்தப்படுமானால் அதற்கு இந்ந்நாட்டு மக்கள் தகுந்த பதிலடி கொடுப்பார்கள். இணையத்தளங்கள் மூலம் ஈழக்கொடியை உயர்த்த முற்படுவதும் முடியாத காரியம். அதற்கு இந்நாட்டின் தேசப்பற்றுள்ளவர்கள் இடமளிக்க மாட்டார்கள்.

எவராவது அவ்வாறு கனவு காண்பார்களானால் அது ஒருபோதும் பலிக்காது.என்று அவர் மேலும் தெரிவிததார்.

Source & Thanks : .puthinappalakai

Leave a Reply

Your email address will not be published.