முடிந்தால் கைது செய்யுங்கள்: மம்தா பானர்ஜி

மாவோயிஸ்டுகளுடன் எனக்கு தொடர்பு உள்ளது என்ற குற்றச்சாட்டு உண்மையானால், என்னை கைது செய்யுங்கள் என மேற்கு வங்க அரசுக்கு மத்திய ரயில்வே அமைச்சர் மம்தா பானர்ஜி சவால் விடுத்தார்.


மத்திய அமைச்சரான பின் நந்திகிராமத்துக்கு முதல் முறையாக வந்த மம்தா பானர்ஜி, சோனாசுரா என்ற இடத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் பேசியதாவது: எனக்கு மாவோயிஸ்டுகளுடன் தொடர்பு இருந்தால் மாநில அரசு என்னை கைது செய்யட்டும். அரசுக்கு நான் சவால் விடுக்கிறேன். மாநில முதல்வர் புத்ததேவ் பட்டாச்சார்ஜி மாவோயிஸ்டுகளுக்கும், மார்க்சிஸ்டுகளுக்கும் தலைவராக இருக்கிறார் என்றார்.

Source & Thanks : newindianews.

Leave a Reply

Your email address will not be published.