காஷ்மீர் இளைஞர்களுக்கு ஆயுத பயிற்சி: தீவிரவாதியை கொன்ற பெண் கோரிக்கை

காஷ்மீரில் தீவிரவாதிகளை ஒழிக்க இளைஞர்களுக்கு ஆயுதப் பயிற்சி அளிக்க வேண்டும் என்று சமீபத்தில் தீவிரவாதியை கொன்ற இளம் பெண் கோரியுள்ளார்.


காஷ்மீரில் ரஜோரி மாவட்டத்தில் கடந்த செப்டம்பர் 27ம் தேதி தன் வீட்டில் நுழைந்த 2 தீவிரவாதிகளில் ஒருவரின் துப்பாக்கியைப் பிடுங்கி அவரை சுட்டுக் கொன்றார் ருக்சனா கவுசர் என்ற 21வயது இளம் பெண். அவரது வீரத்தை ஜனாதிபதி பிரதீபா பாட்டீல் பாராட்டினார்.
இதற்கு பழிவாங்கும் விதமாக ருக்சனாவின் வீட்டில் நேற்று முன்தினம் தீவிரவாதிகள் குண்டு வீசி தாக்கினர். வீட்டில் யாரும் இல்லாததால் உயிர் சேதம் இல்லை.

இந்நிலையில், ருக்சனா நேற்று அளித்த பேட்டியில், “தீவிரவாதிகளை சமாளிக்க காஷ்மீர் இளைஞர்களுக்கு ஆயுதப் பயிற்சி அளிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்போதுதான் தீவிரவாதத்தை ஒழிக்க முடியும். மாநிலமும் வளர்ச்சி அடையும்” என்றார்.

Source & Thanks : newindianews

Leave a Reply

Your email address will not be published.