ஜனாதிபதியை கொலை செய்ய எத்தனித்த ஒருவர் யாழ்ப்பாணத்தில் கைது

ஜனாதிபதியை கொலை செய்ய எத்தனித்த மற்றும் ஒருவரை யாழ்ப்பாணத்தில் வைத்து கைது செய்துள்ளதாக குற்றப்புலனாய்வு துறையினர், கல்கிஸ்ஸை நீதிமன்றத்தில், தெரிவித்துள்ளனர்.

இவர் அச்சுவேலியை சேர்ந்தவர் என்றும் தமிழீழ விடுதலைப்புலிகளின் உறுப்பினர் என்றும் புலனாய்வுத் துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.

ஜனாதிபதியை கொலை செய்ய முயற்சித்ததாக கூறி ஏற்கனவே, இராணுவ கேணல் ரஞ்சித் பெரேரா, அவரது மனைவி கரீமா ஹமீட், ராமசாமி பிரபாகரன் மற்றும் சானுக்க கலுதேரா ஆகியோர் கைது செய்யப்பட்டு இரகசிய பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

இவர்களின் தகவல்களின்படியே யாழ்ப்பாணத்தில் வைத்து ஒருவர் கைது செய்யப்பட்டதாக புலனாய்வுத் துறையினர் தெரிவித்துள்ளனர்.

Source & Thanks : tamilwin

Leave a Reply

Your email address will not be published.