கப்பலை எரியூட்டப் போவதாக வெளியான செய்திகளில் உண்மையில்லை: இந்தோனேசிய கப்பல் அகதிகள்

இந்தோனேசியாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 260 இலங்கை அகதிகள், கப்பலை எரியூட்டப் போவதாக வெளியான செய்திகளில் எந்தவித உண்மையும் இல்லை என கப்பலில் உள்ள அகதிகளின் சார்பாக பேசவல்ல அலெக்ஸ் தெரிவித்துள்ளார்.


அவுஸ்திரேலியா செல்லும் வழியில் கடந்த 11 ஆம் திகதி இந்தோனேசிய கடற்படையினரால் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருக்கும் இலங்கை அகதிகள் 260 பேர் நேற்றைய தினம் ஆர்ப்பாட்டம் ஒன்றில் ஈடுபட்டனர்.

இதனைத் தொடர்ந்தே குறித்த அகதிகள் கப்பலுக்கு தீ மூட்டப்போவதாக செய்திகள் வெளியாகின.

இதனை முற்றாக மறுத்துள்ள அகதிகளின் சார்பில் பேசவல்ல அலெக்ஸ், தம்மை ஐக்கிய நாடுகளின் அகதியினருக்கான பேரவையின் உயரதிகாரிகள் வந்து சந்திக்க வேண்டுமென்றே தாம் கோரியிருந்ததாக குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையில் நேற்றைய ஆர்ப்பாட்டத்தின் போது தாங்கள் கப்பலை எரியூட்டப் போவதாக வெளியான செய்திகளில் எதுவிதமான உண்மையும் இல்லை என அலெக்ஸ் தெரிவித்துள்ளார்.

இவ்வாறான நிலையில் அகதி அந்தஸ்து கோரி போராடும் தாம், தொடர்பில் வெளியாகும் தவறான செய்திகள் தங்களது கோரிக்கையை வலிமையிழக்க செய்வதாக அமைவதுடன் வருத்தத்தை ஏற்படுத்துவதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

Source & Thanks : tamilwin

Leave a Reply

Your email address will not be published.