அணு திட்டம் குறித்த சர்வதேச உடன்படிக்கையை இரான் ஏற்குமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது

இரான் அணு ஆயுதங்களை தயாரிக்க முயற்சிக்கிறது என்ற சர்வதேச கவலையை குறைக்கும் நோக்கில் கொண்டுவரப்படவுள்ள உடன்படிக்கையை இரான் ஏற்குமா என்பது குறித்து அந்த நாட்டின் அரச தொலைக்காட்சி சந்தேகம் எழுப்பியுள்ளது.

தனது இராணுவம் சாரா ஆய்வு ஆலைகளுக்கு தேவையான யுரேனிய செறிவாக்கலை வெளிநாடுகளில் வைத்துச் செய்வதை விட, அணுசக்தி எரிபொருளை இறக்குமதி செய்வதற்கே இரான் முன்னுரிமை கொடுக்கும் என்று அரச தொலைக்காட்சி கூறியுள்ளது.

உத்தேச உடன்படிக்கையை ஏற்பதற்கான காலக்கெடு வெள்ளிக்கிழமையுடன் முடிவடையும் என்று ஐக்கிய நாடுகள் அமைப்பின் அணு கண்காணிப்பு மையம் நிர்ணயித்திருந்தது.

இந்த உடன்படிக்கையை அமெரிக்கா, ரஷ்யா, பிரான்ஸ் போன்ற ஏனைய தரப்புக்கள் ஏற்கனவே ஏற்றுக்கொண்டு விட்டதாகவும், இரானின் தற்போதைய பிரேரணையை அவை ஏற்காது என்றும் தெஃரானுக்கான பிபிசியின் செய்தியாளர் கூறுகிறார்.

Source & Thanks : bbc.co.uk

Leave a Reply

Your email address will not be published.