ஒபாமா போட்டியிட்டாலும் ஜனாதிபதியை வீழ்த்த முடியாது : அனுத்த ரத்வத்தே

அமெரிக்க ஜனாதிபதி பரக் ஒபாமா இலங்கை ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்டாலும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை வீழ்த்த முடியாது என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தேசிய அமைப்பாளர் ஜெனரல் அனுத்த ரத்வத்தே தெரிவித்துள்ளார்.


எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் எந்தத் திகதியில் நடைபெற்றாலும் அது ஜனாதிபதியின் வெற்றியை பாதிக்காது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

30 ஆண்டுகளாக நீடித்த வடக்கு கிழக்கு யுத்தத்தை ஜனாதிபதி மிகவும் வெற்றிகரமாக தோற்கடித்துள்ளமையினால் அவருக்கு சவாலாக அமையக் கூடிய வேட்பாளர்களை எவராலும் நிறுத்த முடியாது என ரத்வத்தே சுட்டிக்காட்டியுள்ளார்.

ஜெனரல் சரத் பொன்சேகாவோ அல்லது சரத் என் சில்வாவோ எதிர்க்கட்சிகளின் சதி வலையில் சிக்க மாட்டார்கள் என அவர் தெரிவித்துள்ளார்.

எதிர்க்கட்சியின் பொது வேட்பாளராக பரக் ஒபாமாவை நிறுத்தினாலும் சாதகமான பலன் கிட்டாது என்பது தின்னம் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Source & Thanks : tamilwin

Leave a Reply

Your email address will not be published.