அதிக சம்பளம் பெறுவோர் பட்டியல்: அனில் அம்பானி முதலிடம்

புதுடில்லி: இந்தியாவில் அதிகம் சம்பளம் பெறுவோர் பட்டியலில் அனில் அம்பானி முதலிடம் பிடித்துள்ளார். சமீபத்தில் இந்தியாவில் அதிகம் சம்பளம் பெறுவோர் பட்டியல் வெளியிடப் பட்டது. இதில் இந்தியாவின் முன்னணியில் உள்ள 100 நிறுவனங்களின் ஊதியம் ஆய்வில் எடுத்துக் ‌கொள்ளப் பட்டது.

இந்த ஆய்வில், இந்தியாவில் அதிகம் சம்பளம் பெறுவோரில் முதலிடத்தை அனில் அம்பானி தட்டி சென்றுள்ளார். இவர் ஆண்டுக்கு ரூ. 30 கோடி சம்பளம் பெறுகிறார். இரண்டாவதாக இடம் பெற்று இருப்பவர் ரான்பாக்சி நிறுவனத்தின் முன்னாள் தலைவர் மல்விந்தர் சிங். அவரது ஆண்டு சம்பளம் ரூ. 23 கோடி ஆகும். பார்தி ஏர்டெல் நிறுவனத்தின் தலைவர் சுனில் பார்தி மிட்டல் 3வது இடத்தை பெற்றுள்ளார் அவரது சம்பளமும் ஆண்டுக்கு ரூ. 23 கோடி ஆகும். முதலிடம் பிடித்த அனில் அம்பானியில் அண்ணன் முகேஷ் அம்பானி, அவரது நிறுவன ஆண்டு நிதிநிலை அறிக்கையை வெளியிடாத காரணத்தால், பட்டியலில் இடம் பெற வில்லை. இந்தியாவில் அதிக சம்பளம் வாங்குவோர் பட்டியலில் அனில் அம்பானி இடம் பெற்று இருந்தாலும், உலக அளவில் முதல் 100 சக்திவாய்ந்தவர்கள் பட்டியலில், அனில் அம்பானி தனது 67வது இடத்தில் இருந்து 30 இடங்களுக்கு கீழ் தள்ளப் பட்டது 97 வது இடத்தை பிடித்தது குறிப்பிடத் தக்கது.

Source & Thanks : dinamalar

Leave a Reply

Your email address will not be published.