செயற்கை நீரூற்று அமைப்பு

ஊட்டி: சுற்றுலாப் பயணிகளைக் கவர, பைக்காரா படகு இல்லத்தில், நான்கரை லட்சம் ரூபாய் செலவில் செயற்கை நீருற்று அமைக்கப்பட்டுள்ளது. சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் கட்டுப்பாட்டில், நீலகிரி – பைக்காரா பகுதியில், படகு இல்லம் அமைக்கப்பட்டுள்ளது.

ஊட்டி ஏரியில் கழிவுகள் கலப்பதால், பெரும்பாலான சுற்றுலாப் பயணிகள், பைக்காரா ஏரியில் படகு சவாரி செய்வதையே விரும்புகின்றனர். இங்கு வரும் சுற்றுலாப் பயணிகளைக் கவரும் வகையில், குடில் படகுகள், மோட்டார் படகுகள் காஸ் மூலம் இயக்கப்படுகின்றன. மிதி படகுகள் மற்றும் துடுப்பு படகுகளும் இயக்கப்படுகின்றன. தற்போது, இரண்டாம் சீசன் துவங்கியுள்ள நிலையில், சுற்றுலாப் பயணிகளைக் கவர, மலைப்பகுதி மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், நான்கரை லட்சம் ரூபாய் மதிப்பில், ஏரியில் நடுவே செயற்கை நீருற்று அமைக்கப்பட்டுள்ளது.

தற்போது இயங்கி வரும் உணவகம், படகு இல்லம் உள்ள பகுதிக்கே மாற்றப்படுகிறது. இதன் கட்டுமானப் பணி, துரிதமாக நடந்து வருகிறது. இம்மாத இறுதிக்குள் இப்பணிகள் நிறைவடையும் என, பைக்காரா படகு இல்ல மேலாளர் பாலசுப்ரமணியம் தெரிவித்தார்.

Source & Thanks : dinamalar

Leave a Reply

Your email address will not be published.