இன்று தொண்டைமானாறு செல்வச்சந்நிதி முருகன் ஆலய தேர்த்திருவிழா

வரலாற்றுப் புகழ்மிக்க தொண்டைமானாறு செல்வச்சந்நிதி முருகன் ஆலய இரதோற்சவம் இன்று காலை நடைபெறுகின்றது. இவ்வருடம் வழமையை விட பெருந்தொகையான பக்தர்கள் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இன்று காலை 8.30. மணியளவில் இரதோற்சவமும். நாளை முற்பகல் 10.00 மணியளவில் தீர்த்தோற்சவமும் நடைபெறவுள்ளது. இவ்வருடம் தொண்டைமானாறு செல்வச்சந்நிதிக்குச் செல்லும் பக்தர்கள் பெருமளவில் சோதனைக்குள்ளாகும் வல்லைச் சந்தி சோதனைச் சாவடியில் எந்தவிதமான சோதனைகளும் இல்லாமல் சென்று திரும்புவதற்கு அனுமதிக்கப்படுகின்றனர்.

அத்துடன் கடந்த காலங்களில் இரவு வேளைகளில் ஆலய வீதிகளில் தங்கியிருக்கும் நடைமுறையில் விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகளும் தளர்த்தப்பட்டுள்ளன.

கடந்த காலங்களிலும் பார்க்க இந்த வருடம் ஆலயங்களுக்குச் செல்லும் அடியார்களின் தொகையும் பன்மடங்கு அதிகரித்துள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதேவேளை இன்று நடைபெறவுள்ள இரதோற்சவத்தில் பக்தர்களின் வசதிக்காக யாழ்ப்பாணம், பருத்தித்துறை பஸ் டிப்போவிலிருந்து பல போக்குவரத்து வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

பொதுமக்கள் பெருமளவில் கூடும் இடங்களில் திருடர்களின் தொல்லை அச்சுறுத்தலாக இருப்பதால் அடியார்கள் தங்கநகைகளை அணிந்து வருவதை தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக ஆலய நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

Source & Thanks : tamilwin.com

Leave a Reply

Your email address will not be published.