வன்னியில் கைதான ஐந்தாவது தமிழ் மருத்துவரும் பிணையில் விடுவிப்பு

வன்னியில் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்தவேளை, அரசுக்கு எதிரான அவதூறுச் செய்திகளை வெளிநாட்டு செய்தி முகவர்களுக்கு வழங்கியதாக குற்றஞ்சாட்டி சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்த ஐந்தாவது தமிழ் மருத்துவரும் நேற்று பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

புதுக்குடியிருப்பு வைத்தியசாலையில் பணியாற்றிய டாக்டர் எஸ்.சிவபாலன் நேற்று கொழும்பு பிரதம நீதிவான் நிஷாந்த ஹப்பு ஆராய்ச்சி முன்னிலையில் ஆஜர் செய்யப்பட்டார்.

அவரை விடுவிப்பதற்கு ஆட்சேபம் இல்லை என பொலிஸார் தெரிவித்ததை அடுத்து மருத்துவர் இரண்டு இலட்சம் ரூபா உறுதிப் பிணையில் அவர் விடுவிக்கப்பட்டார்.

அவருடன் தடுத்து வைக்கப்பட்டி ருந்த நான்கு மருத்துவர்களையும் கடந்த 24ஆம் திகதி நிபந்தனைப் பிணையில் செல்ல கொழும்பு பிரதம நீதிவானால் அனுமதிக்கப்பட்டிருந்தது என்பது தெரிந்ததே.

Source & Thanks : tamilwin

Leave a Reply

Your email address will not be published.