சக்திவாய்ந்த பெண்களில் சோனியாவுக்கு இடம்

நியூயார்க், : உலகின் மிகவும் சக்திவாய்ந்த பெண்கள் பட்டியலில், முதல் 20 இடத்தில், காங்கிரஸ் தலைவர் சோனியா மற்றும் ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கியின் தலைமை நிர்வாக அதிகாரி சந்தா கோச்சார் ஆகியோர் இடம் பெற்றுள்ளார். “போர்ப்ஸ்’ பத்திரிகை, உலகின் மிகவும் சக்தி வாய்ந்த 100 பெண்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது.

இதில், காங்கிரஸ் தலைவர் சோனியா 13வது இடம் பிடித்துள்ளார். ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கியின் தலைமை நிர்வாக அதிகாரியும், மேலாண்மை இயக்குனருமான சந்தா கோச்சார், இந்த பட்டியலில், 20வது இடம் பிடித்துள்ளார்.

இந்திய வம்சாவளியை சேர்ந்தவரும், “பெப்சி’ நிறுவனத்தின் தலைமை நிர்வாகியுமான இந்திரா நூயி, இந்தப் பட்டியலில் மூன்றாம் இடம் பிடித்துள்ளார். “யாகூ’ நிறுவனத்தைச் சேர்ந்த கரோல் பார்ட்ஸ், சோனியாவுக்கு முந்தைய இடமான, 12வது இடத்தைப் பிடித்துள்ளார்.

Source & Thanks : dinamalar

Leave a Reply

Your email address will not be published.