பாரிய விண்கற்கள் பூமியை தாக்கும் அபாயம்

குறைந்தது 460 அடி விட்டமும், அதிகபட்சமாக 3,280 அடி விட்டமும் கொண்ட சுமார் 20,000 விண்கற்கள் வான்வெளியில் சுற்றிக்கொண்டிருப்பதாக அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி மையமான நாஸா மதிப்பிட்டிருக்கிறது.

இவை எப்போதாவது திடீரென பூமியை நோக்கி வரலாம். பூமியைத் தாக்கி, பாரிய சேதத்தை உண்டாக்கக் கூடியவை என்று நாஸா ஏற்கனவே எச்சரித்திருக்கிறது.

எனவே ஆபத்தை விளைவிக்கும் மேற்படி கற்களின் போக்கைத் துள்ளியமாக கண்டுபிடிக்குமாறு நான்கு வருடங்களுக்கு முன்பே அமெரிக்க காங்கிரஸ் நாஸாவிடம் கேட்டுக்கொண்டிருந்தது. அதற்குத் தேவையான பணமும் ஒதுக்கப்பட்டிருந்தது.

ஆனால் இன்னமும் அந்தப் பணம் நாஸாவிடம் போய்ச் சேரவில்லை. இதனால் விண்கற்களின் போக்கைக் கண்டுபிடிக்கத் தேவையான நவீன ‘டெலஸ்கோப்’ களை வாங்க முடியாமலிருப்பதாக நாஸா கூறுகிறது.

90 சதவீத விண்கற்களை 2020க்குள் கண்டுபிடிக்க வேண்டும் என்று நாஸாவை அமெரிக்கா கேட்டுக் கொண்டிருந்தாலும், இப்போதுள்ள டெலஸ்கோப் வசதியை கொண்டு அதில் மூன்றில் ஒரு பங்கு விண்கற்களை மட்டுமே கண்டுபிடிக்க முடியும் என்று நாஸா கூறுவதாக நேஷனல் அகாடமி ஒஃப் சயின்ஸ் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

கடந்த மாதத்தில் இம்மாதிரியான ஒரு விண்கல், ஜூபிடரைத் தாக்கி, பூமி அளவில் அங்கு பள்ளத்தை ஏற்படுத்தியதை நாஸா கண்டுபிடித்திருக்கிறது

Source & Thanks : virakesari.lk

Leave a Reply

Your email address will not be published.