ரியில்லாத சர்க்கரை இறக்குமதிக்கு 2010 வரை அனுமதி – பவார்

டெல்லி: வரும் 2010 வரை கச்சா சர்க்கரையை வரி இல்லாமல் இறக்குமதி செய்து கொள்ள அனுமதிப்பதாக மத்திய விவசாயத் துறை அமைச்சர் சரத் பவார் தெரிவித்துள்ளார்.

சுத்திரகரிக்கப்பட்ட சர்க்கரையை வரியின்றி இறக்குமதி செய்து கொள்ள தனியாருக்கு வழங்கப்பட்ட அனுதி மேலும் தொடர்வதாக அரசு அறிவித்துள்ளது.

இந்த அறிவிப்புகளை ராஜ்ய சபையில் வெளியிட்ட அமைச்சர் சரத் பவார், வெள்ளை சர்க்கரையை வரியில்லாமல் இறக்குமதி செய்வது வரும் நவம்பர் 30 வரை நீட்டிக்கப்படுவதாகத் தெரிவித்தார்.

கச்சா சர்க்கரையை ஓபன் கிரீன் சேனல் மூலம் வரியின்றி இறக்குமதி செய்வதற்கான சலுதைத் தேரி வரும் ஆகஸ்ட் 1-ம் தேதி வரை மட்டுமே உள்ளது. இதனை வரும் மார்ச் 31, 2010 வரை நீட்டித்துள்ளது அரசு.

இந்த சலுகை நீட்டிப்புகளின் மூலம் உள்நாட்டில் சர்க்கரை தாராளமாகக் கிடைக்கும் என்றும், தற்போதைய விலைகளில் லேசான சரிவு ஏற்படவும் வாய்ப்பிருப்பதாக சரத் பவார் தெரிவித்தார்.

Source & Thanks : thatstamil.oneindia.in

Leave a Reply

Your email address will not be published.