வவுனியா முகாம்களில் மக்கள் அனுபவிக்கும் கொடுமைகளை உணர முடிகிறது – எரிக் பி ஸ்க்வாட்ஸ்

முகாம்களில் உள்ள மக்கள் அனுபவிக்கின்ற கொடுமைகளை தம்மால் உணர்ந்துக் கொள்ள கூடியதாக இருப்பதாக அமெரிக்காவின் சனத்தொகை மற்றும் அகதிகள் விவகார உதவி செயலாளர் எரிக் பி ஸ்க்வாட்ஸ் தெரிவித்துள்ளார்.

வவுனியா மனிக் பாம் முகாமுக்கு சென்று பார்வையிட்டதன் பின்னர் இந்த நிலைலைய அவதானிக்க கூடியதாக இருந்தாக அவர் தெரிவித்துள்ளார்.

சிறிய இடம் ஒன்றில் இத்தனை பாரிய அளவு சனத்தொகை நெருக்கடியில் கலாசாரத்தை பேணி வாழ்க்கை நடத்துவது மிகவும் கொடுமையானது என அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் இடம்பெயர்ந்த மக்களுக்கான மனிதாபிமான உதவிகளை வழங்குவதற்கு அமெரிக்கா தயாராகவே இருக்கிறது. ஆனால் அது தொடர்பில் இலங்கை அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி உறுதிப்பாடு ஒன்றுக்க வந்த பின்னரே இது சாத்தியமடையும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், முகாம் தொடர்பிலும், முகாம் மக்கள் தொடர்பிலுமான உண்மையான தகவல்கள் வெளியில் வராமலே இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

இதற்கு அரசாங்கம் பிண்ணனியில் இருந்து உண்மைத் தகவல்களை மறைக்க முற்படுவது கண்டனதுக்கு உரியது என தெரிவித்த அவர், எனினும் இந்த நிலையினை மாற்றி மக்களுக்கான மனிதாபிமான நடவடிக்கைகளை அதிகரிப்பதுடன், அவர்களை மீள குடியமர்த்தும் நடவடிக்கைகளை துரித கதியில் மேற்கொள்ளவும் இலங்கை அரசாங்கம் தம்மிடம் உறுதியளித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கிடையில் அவரை மீண்டும் இலங்கைக்கு வந்து முகாம்களில் வளர்ச்சி கட்டம் மற்றும் மீள் குடியேற்ற நடவடிக்கைகள் தொடர்பில் ஆராயுமாறு அரசாங்கம் கோரியிருப்பதாகவும், அதனை தாம் ஏற்றுக் கொண்டுள்ளதாகவும் வெளிநாட்டு ஊடகம் ஒன்றுக்கு தெரிவித்துள்ளார்.

Source & Thanks : tamilwin

Leave a Reply

Your email address will not be published.