தலிபான் பயங்கரவாதிகளால் பிரிட்டனுக்கு ஆபத்து!

லண்டன் : பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் நாட்டில் உள்ள தலிபான் பயங்கரவாதிகளால், பிரிட்டனுக்கு அச்சுறுத்தல் உள்ளதாக, அந்நாட்டு பிரதமர் கார்டன் பிரவுன் தெரிவித்தார். இதுகுறித்து, நிருபர்களுக்கு பேட்டியளித்த கார்டன் பிரவுன் கூறியதாவது:

பாகிஸ்தான், தங்கள் நாட்டிற்குள் இருக்கும் தலிபான் பயங்கரவாதிகளை எதிர்த்து போராடுவதை, தற்போது முதல்முறையாக காண்கிறோம். பாகிஸ்தான், இந்திய எல்லையில் தங்கள் நாட்டு ராணுவத்தை குவித்திருந்தாலும், மற்ற எல்லைப்பகுதிகளிலும், ராணுவத்தை நிறுத்த வேண்டியதன் அவசியத்தை, உணர்ந்துள்ளது. பாக்., ராணுவ படைகள், தற்போது ஸ்வாட் பள்ளத்தாக்கை நோக்கி நகருகின்றன. பாக்., மற்றும் ஆப்கானிஸ்தானில் உள்ள தலிபான்களால், பிரிட்டனுக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. ஆனால், இந்த அச்சுறுத்தல்களை எதிர்த்து போராடும் திறன், நமது அரசிடம் உள்ளது. அதுமட்டுமல்லாமல், ஆப்கன் மற்றும் பாகிஸ்தான் விவகாரத்தை கையாள அரசிடம் சிறப்பு கொள்கை உள்ளது. மேலும், ஆப்கானிஸ்தானில் உள்ள பிரிட்டன் படைகளுக்கு போதுமான ஹெலிகாப்டர்கள் இல்லை என லார்டு பிரவுன் தெரிவித்துள்ளார். இது தவறானது. ஆப்கனில் உள்ள பிரிட்டன் படைகளுக்கு தேவையான ஹெலிகாப்டர்கள் உள்ளன. கடந்த மாதங்களில் ஏற்பட்ட உயிரிழப்புகளுக்கு, ஹெலிகாப்டர்கள் பற்றாக்குறை காரணமல்ல. இவ்வாறு அவர் கூறினார்.

Source & Thanks : dinamalar

Leave a Reply

Your email address will not be published.