செல்போன்” வடிவில் துப்பாக்கி, பதற்றத்தில் இலங்கை பாதுகாப்பு அமைச்சு.

செல்போன்” வடிவில் புதிய துப்பாக்கிகள் உலக சந்தைக்கு வந்துள்ளதால் இலங்கை படை அதிகாரிகளை எச்சரிக்கையாக இருக்குமாறு இலங்கை பாதுகாப்பு அமைச்சகம் எச்சரித்துள்ளது.

இது தொடர்பில் பாதுகாப்பு அமைச்சக வட்டாரங்கள் மேலும் தெரிவித்துள்ளதாவது:

‘செல்போன்” வடிவத்திலும் அதன் அளவிலும் புதிய ரக துப்பாக்கிகள் உலகச் சந்தைக்கு வந்துள்ளன. அவை விரைவில் இலங்கைக்கும் கொண்டுவரப்படலாம் எனவே படை உயர் அதிகாரிகள் மிகவும் அவதானமாக இருக்க வேண்டும்.

இந்தவகை துப்பாக்கி ஏற்கனவே தயாரிக்கப்பட்டிருப்பினும், தற்போதே உலக சந்தைகளில் விற்பனைக்கு வந்துள்ளது. இந்த துப்பாக்கி 0.22 மி.மீ வகை துப்பாக்கி ரவைகள் நான்கை கொண்டது. செல்போன் வடிவில் அமைந்திருக்கும் துப்பாக்கியிலுள்ள தொலைபேசியில் ஒரு இலக்கத்தை அழுத்துவதன் மூலம் வெடித்து பாயும் துப்பாக்கி குண்டு துப்பாக்கியின் முன்பகுதியால் வெளியேறும் தன்மை கொண்டது. இந்த வகை துப்பாக்கிகள் பிரித்தானியாவின் சந்தைகளில் தற்போது விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

Source   &    Thanks  :   tamilwin

Leave a Reply

Your email address will not be published.