படையினரிடம் சரணடைந்த பொதுமக்களில் 50000 பேர் விடுதலைப் புலிகளுடன் தொடர்பு?

அரசாங்கப் படையினரிடம் சரணடைந்த பொதுமக்களில் 50,000 பேர் தமிழீழ விடுதலைப் புலிகளுடன் தொடர்புகளைப் பேணியவர்கள் என தெரிவிக்கப்படுகிறது. குறித்த 50,000 பேருக்கும் புனர்வாழ்வு அளிக்கப்பட வேண்டுமென அரசாங்கம் ஆலோசனை வழங்கியுள்ளது.


முகாம்களில் தங்கியுள்ள சுமார் 20000 குடும்பங்களைச் சேர்ந்த உறுப்பினர்கள் புலிகளுடன் தொடர்புகளைப் பேணியதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இவர்களில் பெரும்பான்மையானவர்கள் சிறுவர் போராளிகள் எனவும் அடையாளம் காணப்பட்டுள்ளது.

குறித்த நபர்கள் தனியான முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும், விரைவில் அவர்களுக்கு புனர்வாழ்வு அளிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

இவர்களுக்கு புனர்வாழ்வு அளிக்கும் பணிகளுக்காக விசேட ஆணையாளர் ஓருவர் நியமிக்கப்பட உள்ளதாகவும், இராணுவ உயர் அதிகாரியொருவர் இதற்காக நியமிக்கப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

Source & Thanks : tamilwin

Leave a Reply

Your email address will not be published.