தமிழக இடைத்தேர்தலில் இடதுசாரிகள் போட்டியிட முடிவு

சென்னை : இடைத்தேர்தலை அ.தி.மு.க., புறக்கணித்திருந்தாலும், அதன் கூட்டணி கட்சிகளான மார்க்சிஸ்ட் மற்றும் இந்திய கம்யூ., கட்சிகள் அ.தி.மு.க.,வின் முடிவை ஏற்றுக்கொள்ளவில்லை. தொண்டாமுத்தூர், கம்பம் ஆகிய தொகுதிகளில் மார்க்சிஸ்ட் கம்யூ.,வும் ; பர்கூர் ; ஸ்ரீவைகுண்டம் தொகுதிகளில் இந்திய கம்யூ., வும் போட்டியிட முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது. திருச்சியில் நடைபெறவிருக்கும் செய்தியாளர்கள் சந்திப்பில் இரு கட்சிகளும் கூட்டறிக்கையை அதிகாரப்பூர்வமாக வெளியிடுகிறது.

தமிழகத்தில் நடைபெறவுள்ள ஐந்து சட்டசபைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல்களை, அ.தி.மு.க., – பா.ம.க., – ம.தி.மு.க., கட்சிகள் புறக்கணிக்கப் போவதாக அறிவித்துள்ளன.

இரு கம்யூனிஸ்ட் கட்சிகளும் கூட்டணி அமைத்து, தலா இரண்டு தொகுதி வீதம் நான்கு தொகுதிகளில் போட்டியிட முடிவு எடுக்கும் என, அக்கட்சி வட்டாரங்கள் தெரிவித்திருந்தன. தேர்தல் நடக்க உள்ள தொகுதிகள் உள்ளடங்கிய மாவட்டங்களில், மா.கம்யூ., மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் நடந்தது. இடைத்தேர்தலில் கம்பம், தொண்டாமுத்தூர் தொகுதிகளில் வேட்பாளரை நிறுத்துவது குறித்தும், தே.மு.தி.க.,வுடன் கூட்டணி பேச்சு நடத்துவது குறித்தும் ஆலோசிக்கப்பட்ட து. லோக்சபா தேர்தலில் அ.தி.மு.க.,வை ஆதரித்ததால் இப்போது உடனடியாக தி.மு.க.,வை ஆதரிக்க இயலாது. “எனவே, ஓட்டு வங்கி உள்ள தே.மு.தி.க.,வுடன் இணைந்து தேர்தலை சந்தித்தால் அரசுக்கு எதிரான ஓட்டுகள் சிதறாது. இது பொது தேர்தல் கூட்டணிக்கு அடித்தளமாகவும் அமையும்’ என, இந்த கூட்டத்தில் நிர்வாகிகள் கருத்து தெரிவித்திருந்தனனர். இது குறித்தும் இன்று திருச்சியில் நடக்கும் கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளது. தேர்தலில் போட்டியிட ஆர்வம் காட்டி வரும் இரு கம்யூனிஸ்ட் கட்சிகளும், தே.மு.தி.க.,வுடன் கூட்டணி அமைப்பதற்கான காய் நகர்த்தலில் ரகசியமாக ஈடுபட்டுள்ளதாக பரபரப்பு எழுந்தது.

Source & Thanks : dinamalar

Leave a Reply

Your email address will not be published.