இடம்பெயர்ந்து முகாம்களில் வாழும் மக்களை விரைவில் மீள்குடியமர்த்தப்படாவிட்டால் நிதி வழங்கலில் சிக்கல் நிலை உருவாகும் – நீல் புனே

வெகுவிரைவில் இடம்பெயர்ந்து முகாம்களில் வாழும் மக்களை தமது சொந்த இடங்களில் மீளக் குடியமர்த்தப்படாவிட்டால் சிக்கல் நிலைமைகள் உருவாகும் என ஐக்கிய நாடுகளின் இலங்கைக்கான வதிவிடப் பிரதிநிதி நீல் புனே தெரிவித்துள்ளார்.


பெரும் தொகையான இடம்பெயர் மக்களுக்கு நீண்ட காலத்திற்கு மனிதாபிமான உதவிகளை வழங்குவதென்பது முடியாத செயல் என அவர் தெரிவித்துள்ளார்.

எனவே விரைவில் இடம்பெயர் மக்களை மீளக் குடியமர்த்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார்.

வடக்கில் இடம்பெயர்ந்து வாழும் அப்பாவி மக்களை மீளக் குடியமர்த்துவது தொடர்பில் தெளிவான திட்டமொன்றை இலங்கை முன்வைக்க வேண்டும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

வவுனியா, மன்னார், திருகோணமலை மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களில் பெரும் எண்ணிக்கையிலான மக்கள் அரசாங்கத்தின் 35 முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

மக்களை மீளக் குடியமர்த்துல் மற்றும் எந்த காலத்தில் பூரணமாக மக்களை சொந்த இடங்களில் குடியமர்த்த முடியும் என்பது குறித்து இலங்கை அரசாங்கம் தெளிவான திட்டங்களை முன்வைக்க வேண்டுமென அவர் குறிப்பிட்டுள்ளார்.

குறிப்பாக மக்களுக்கு நிவாரணங்களை வழங்குவதற்கான நிதி ஒதுக்கீடுகளை மேற்கொள்வதில் சிக்கல் காணப்படுவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

நீண்ட காலத்திற்கு மக்களை முகாம்களில் தடுத்து வைத்திருத்தல் பொருத்தமான விடயமாக அமையாதென அவர் குறிப்பிட்டுள்ளார்.

எவ்வாறெனினும், சில முகாம்களில் அமைப்பு தற்காலிக ஏற்பாடுகளைவிடவும் நிரந்தரமான ஓர் கட்டமைப்பைக் கொண்டுள்ளதாக தொண்டு நிறுவன ஊழியர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

Source & Thanks : tamilwin

Leave a Reply

Your email address will not be published.