அரசு பள்ளிகளில் தொழிற்கல்வி ரத்து: எதிர்த்த மனு தள்ளுபடி

சென்னை: அரசு பள்ளிகளில் உள்ள தொழிற்கல்வி பாடப் பிரிவுகளை ரத்து செய்ய வகை செய்து பிறப்பித்த அரசாணையை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுவை ஐகோர்ட் தள்ளுபடி செய்தது.”அரசு பள்ளிகளில் பிளஸ் 2 தொழிற்கல்வி பாடப் பிரிவில் 15 மாணவர்களுக்கும் குறைவாக இருந்தால், அந்த படிப்பை நீக்கிவிட வேண்டும்’ என, தமிழக அரசு உத்தரவிட்டது.இந்த உத்தரவை எதிர்த்து ஈரோட்டைச் சேர்ந்த ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் செந்தாமரை, ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

அவர் தனது மனுவில், “1978ம் ஆண்டு முதல் பிளஸ் 2 வகுப்புக்களில் தொழிற்கல்வி பாடப் பிரிவு நடத்தப்பட்டு வருகிறது. 2007ம் ஆண்டு தனி குழு அமைக்கப்பட்டு, இப்பாடப் பிரிவுகளுக்கான புதிய பாடத் திட்டமும் வகுக்கப்பட்டது.”பாடப் பிரிவை ரத்து செய்வதாக பிறப்பித்த உத்தரவு சட்ட விரோதமானது; தொழிற்படிப்பின் வளர்ச்சியைப் பார்க்காமல், 500க்கும் மேற்பட்ட அரசு பள்ளிகளில் இப்பாடப் பிரிவுகள் நீக்கப்பட்டுள்ளன. எனவே, அரசு உத்தரவை ரத்து செய்ய வேண்டும். அதற்குத் தடை விதிக்கவேண்டும்’ எனக் கோரியிருந்தார்.இந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி கோகலே, நீதிபதி வெங்கட்ராமன் ஆகியோர் அடங்கிய “முதல் பெஞ்ச்’, அரசாணையை ரத்து செய்ய மறுத்து, வழக்கை தள்ளுபடி செய்தது.

Source & Thanks : dinamalar

Leave a Reply

Your email address will not be published.