யாழ்ப்பாணம், கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் தொழில் அமைச்சின் அலுவலகங்கள்: அமைச்சர் அதாவுத செனவிரட்ன

யாழ்ப்பாணம், கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் தொழில் அமைச்சின் அலுவலங்களுக்கான கட்டிடங்கள் நிர்மாணிக்கப்பட உள்ளதாக தொழில் உறவுகள் மற்றும் மனிதவள அமைச்சர் அதாவுத செனவிரட்ன தெரிவித்துள்ளார்.


இரண்டு கட்டங்களாக மேற்கொள்ளப்படும் இந்த நிர்மாணப்பணிகள் எதிர்வரும் 2010 ஆம் ஆண்டு நிறைவு செய்யப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.

கடந்த காலங்களில் வடக்கு கிழக்கு பகுதிகளில் இடம்பெற்ற மோதல்கள் காரணமாக தொழில் அமைச்சின் அலுவலங்கள் பல சேதமடைந்துள்ளன.

அவற்றை துரிதமாக மீள் நிர்மாணம் செய்ய அமைச்சு கவனம் செலுத்தியுள்ளதாகவும் அதாவுத செனவிரட்ன குறிப்பிட்டுள்ளார்.

இந்த கட்டிடங்களை நிர்மாணிப்பதற்காக சர்வதேச தொழிலாளர் அமைப்பு நிதி மற்றும் தொழில்நுட்ப உதவிகளை வழங்கவுள்ளதாகவும் அமைச்சர் கூறியுள்ளார்.

Source & Thanks : tamilwin

Leave a Reply

Your email address will not be published.