பால் உற்பத்தியாளர்களுடன் இம்மாதம் 22ம் தேதி பேச்சுவார்த்தை : முதல்வர் கருணாநிதி அறிவிப்பு

சென்னை : பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தாருடன் வருகிற 22ம் தேதி பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு தீர்வு காணப்படும் என முதல்வர் கருணாநிதி தெரிவித்துள்ளார். சட்டசபையில், எதிர்கட்சிகள் பால் உற்பத்தியாளர்கள் பிரச்னை குறித்து கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தனர்.

அ.தி.மு.க., சார்பில் செங்கோட்டையன், காங்., சார்பில் பீட்டர் அல்போன்ஸ், மார்க்சிஸ்ட் கட்சி உறுப்பினர் நன்மாறன், இ.கம்யூ., சிவபுன்னியம் ஆகியோர் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தனர். கவன ஈர்ப்பு தீர்மானத்துக்கு பதிலளித்த முதல்வர் 22ம் தேதி பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்று கூறினார். மேலும் பேச்சுவார்த்தையில், சுமூக தீர்வு காணப்படும் என நம்பிக்கை தெரிவித்ததோடு, பால் உற்றபத்தியாளர்கள் பாலை சாலைகளில் கொட்டுவது சரியா என கேள்வி எழுப்பியுள்ளார்.

Source & Thanks : dinamalar

Leave a Reply

Your email address will not be published.