6 தடவை தாக்கியது சீனாவில் பூகம்பம்; 600 பேர் படுகாயம் 40 ஆயிரம் வீடுகள் இடிந்தன

சீனாவில் உள்ள யுன்னன் பிராந்தியம், தென்மேற்கு சீனா ஆகிய இடங்களில் நேற்று இரவு 6 தடவை அடுத்தடுத்து நில நடுக்கம் ஏற்பட்டது. இதில் வீடுகள் இடிந்து விழுந்தன. யுன்னன் பகுதி யில் நிலநடுக்க சேதம் அதிகமாக இருந்தது. அங்கு 30 ஆயிரம் வீடுகள் இடிந்து விழுந்தன. 335 பேர் காயம் அடைந்தனர். தென்மேற்கு சீனா பகுதியில் 300 பேர் காயம் அடைந்தனர்.

மொத்தத்தில் இரு பகுதியிலும் சேர்த்து 40 ஆயிரம் வீடுகள் இடிந்துள்ளன. 600 பேருக்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர். அவர்களில் 56 பேர் நிலை கலைக்கிடமாக உள்ளது.

பல்லாயிரக்கணக்கான வீடுகள் இடிந்து இருப்பதால் உயிரிழப்பும் ஏற்பட்டு இருக்கலாம் என கருதப்படுகிறது. ஆனால் அது பற்றி அதிகாரப்பூர்வமாக எந்த தகவலும் வரவில்லை.

6 நில நடுக்கம் அதிகபட்சம் ரிக்டர் ஸ்கேல் அளவுக்கு 5.5 புள்ளியாக இருந்தது. நில நடுக்கத்துக்கு பிறகு 8 தடவை சிறு அதிர்வுகளும் இருந்தன.

கடந்த ஆண்டு மே மாதம் 12-ந் தேதி சீனாவில் உள்ள சிக்பொன் பகுதியில் நில நடுக்கம் ஏற்பட்டு 90 ஆயிரம் பேர் உயிர் இழந்தனர். 3 லட்சத்து 75 ஆயிரம் பேர் காயம் அடைந்தனர்.

Source & Thanks : maalaimalar

Leave a Reply

Your email address will not be published.