வணங்காமண் நிவாரணம் வந்த “கொலராடோ” கப்பலுக்கும் இலங்கை அனுமதி மறுப்பு: (பிந்திய தகவல்) இந்திய செஞ்.சங்கத்தின் அழுத்தத்தினால் துறைமுகம் செல்ல அனுமதி

இலங்கைத் தமிழர்களுக்காக நிவாரணப் பொருள்களை ஏற்றிச் சென்ற கொலராடோ என்ற இந்திய கப்பலையும் இலங்கை கடல் எல்லைக்குள் அனுமதிக்க அந்நாட்டுக் கடற்படை மறுத்துள்ளது. இதனால், நிவாரணப் பொருள்கள் இலங்கை சென்றடைவதில் மீண்டும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இலங்கைத் தமிழர்களுக்காக வெளிநாடு வாழ் தமிழர்கள் திரட்டிய அனுப்பிய நிவாரணப் பொருள்களை ஏற்றி வந்த வணங்காமண் கப்பலை அனுமதிக்க இலங்கை அரசு மறுத்துவிட்டது.
இருவார காலப் போராட்டத்துக்குப் பின்னர் அக்கப்பலில் இருந்த சரக்குகள் கொலராடோ என்ற இந்திய கப்பலுக்கு மாற்றப்பட்டன. பின்னர் சென்னைத் துறைமுகத்தில் இருந்து கொலராடோ கப்பல் கொழும்பு நோக்கி நேற்று செவ்வாய்க்கிழமை புறப்பட்டது.

இக்கப்பலை இலங்கை கடல் எல்லையில் அந்நாட்டுக் கடற்படை தடுத்து நிறுத்தியது. இராணுவத்தின் அனுமதியின்றி கப்பலை மேற்கொண்டு செல்ல அனுமதிக்க முடியாது என்று இலங்கைக் கடற்படை கூறிவிட்டதாகத் தெரிகிறது.

இதனால், நிவாரணப் பொருள்கள் இலங்கை சென்றடைவதில் மீண்டும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

தற்போது வந்த செய்தி:-

இந்திய ஊடகங்களும், இந்திய செஞ்சிலுவை சங்கத்தின் அழுத்தம் காரணமாய் துறைமுகம் செல்ல அனுமதி

இலங்கைத் தமிழர்களுக்காக நிவாரணப் பொருள்களை ஏற்றிச் சென்ற “கொலராடோ” என்ற கப்பலையும் இலங்கை கடல் எல்லைக்குள் அனுமதிக்க அந்நாட்டுக் கடற்படை முதலில் மறுத்தது. இதனால், நிவாரணப் பொருள்கள் இலங்கை சென்றடைவதில் மீண்டும் சிக்கல் ஏற்பட்டது.

பின்னர் இந்திய ஊடகங்களும், இந்திய செஞ்சிலுவை சங்கத்தின் அழுத்தம் காரணமாய் துறைமுகம் செல்ல அனுமதிக்கப்பட்டது. இதனால், தற்போது சுமார் நான்கு மணி நேரம் தாமதமாய் துறைமுகம் செல்கிறது என தெரிவிக்கப்படுகின்றது.

Source & Thanks : tamilwin

Leave a Reply

Your email address will not be published.