பயிற்சி டாக்டர்கள் ரத்த தானம் செய்து போராட்டம்

சென்னை: பயிற்சி டாக்டர்கள் இன்று கறுப்பு துணியால் கண்ணை கட்டிக்கொண்டு ஆர்ப்பாட்டம் நடத்தியதோடு ரத்த தானம் செய்து தங்கள் போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர்.

அரசு மருத்துவக் கல்லூரிகளில் படித்தவாரே அரசு மருத்துவமனைகளில் பயிற்சி டாக்டர்களாகப் பணியாற்றும் மாணவர்கள் தங்களுக்கு தரப்படும் உதவித் தொகையை அதிகரிக்கக் கோரி கடந்த 8 நாட்களாகப் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இதையடுத்து அவர்களது உதவித் தொகையை தமிழக அரசு உயர்த்தியது. ஆனாலும் அந்த உயர்வு போதாது என்று கோரி போராட்டம் நடத்தி வரும் பயிற்சி டாக்டர்கள் நேற்று போராட்டத்தின் ஒரு பகுதியாக ரத்ததானம் செய்தனர்.

இன்று சென்னை மெமோரியல் ஹால் அருகே கறுப்பு துணியால் கண்ணை கட்டிக்கொண்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர். பின்னர் இன்றும் பல டாக்டர்கள் ரத்த தானம் செய்தனர்.

இந்தப் போராட்டத்தால் அரசு மருத்துவமனைகளில் பொது மக்களுக்கு சிகிச்சை அளிக்கும் பணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Source & Thanks : thatstamil.oneindia.in

Leave a Reply

Your email address will not be published.