தமிழர்களுக்கு கிடைக்கவிருந்த நன்மைகளை கெடுத்தது இந்தியா: புலவர் புலமைப்பித்தன் குற்றச்சாட்டு

ஈழத் தமிழர்களுக்கு கிடைக்கவிருந்த நன்மைகளை கெடுத்தது இந்தியா என்று புலவர் புலமைப்பித்தன் குற்றம் சாட்டியுள்ளார்.

சென்னையில் நடைபெற்ற ‘ஈழம்: நேற்றும் நாளையும்’ எனும் கருத்தரங்கில் கலந்துகொண்டு உரையாற்றியபோது மேலும் தெரிவித்துள்ளதாவது:

இலங்கையில் தனி ஈழம் பெற வேண்டும் என்பது புலிகளின் தாகமாக இருந்தது. இப்போது தனி ஈழம் அவர்களுக்கு வேண்டும் என்பது உலகத் தமிழர்களின் கனவாக மாறியுள்ளது.

புலிகளின் எதிரி சிறிலங்கா அல்ல. இந்தியா என்பதை புரிந்துகொள்ள வேண்டும். இலங்கையில் தமிழர்களுக்கு கிடைக்கவிருந்த நன்மைகளை கெடுத்தது இந்தியா.

இந்தியாவின் நுழைவாயில் வழியாக மும்பாயில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியபோது பாகிஸ்தானுக்கு போர் மிரட்டலை கொடுத்தது இந்தியா. ஆனால், தமிழருக்காக நாம் கதறியழுதபோது இந்தியா வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தது.

உலகமே போராடத் தொடங்கிவிட்டது. ராஜபக்ச இனி தனி ஈழம் தரவேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்படுவார் என்பது உறுதி என்றார் அவர்.

Source & Thanks : puthinam

Leave a Reply

Your email address will not be published.