இந்திய எல்லையில் ராக்கெட் குண்டுகள் வீசிய பாகிஸ்தான் தீவிரவாதிகள்

பஞ்சாப் மாநிலத்தில் இந்திய எல்லையில் தண்டா, பகெர்வால் என்ற 2 கிராமங்கள் உள்ளன. கடந்த சனிக்கிழமை இரவு இந்த கிராமங்கள் மீது சரமாரியாக ராக்கெட் குண்டுகள் சீறிப்பாய்ந்து வந்து விழுந்தன.


ராக்கெட் குண்டுகள் வெடித்ததில் வாலிபர் ஒருவர் படுகாயம் அடைந்தார். இதையடுத்து அந்த இரண்டு கிராமங்களிலும் சனிக்கிழமை இரவு பரபரப்பு ஏற்பட்டது. தாக்குதல் நடத்தியது யார் என்பதில் குழப்பம் ஏற்பட்டது.

இதன் காரணமாக கிராம மக்கள் வீட்டை விட்டு வெளியில் வர பயந்து வீடுகளுக்குள் முடங்கிக்கிடந்தனர். தகவல் அறிந்ததும் அந்த கிராமங்களுக்கு ராணுவத்தினர் சென்று விசாரணை நடத்தினார்கள். விடிய, விடிய விசாரணை நடந்தது.

இதையடுத்து இந்திய ராணுவ உயர் அதிகாரிகள், பாகிஸ்தான் ராணுவத்தினரை தொடர்பு கொண்டு விசாரித்தனர். அப்போது பாகிஸ்தான் தீவிரவாதிகள், இந்த தாக்குதலை நடத்தி இருப்பது தெரிய வந்தது. இதில் தொடர்புடையவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதாக பாகிஸ்தான் ராணுவம் உறுதி அளித்துள்ளது.

பாகிஸ்தான் தீவிரவாதிகள் மொத்தம் 3 ராக்கெட்டு குண்டுகளை வீசினார்கள். அதில் இரண்டு மட்டுமே இந்திய எல்லையில் உள்ள கிராமத்துக்குள் வந்து விழுந்தது.

ஒரு ராக்கெட் குண்டு பாகிஸ்தான் எல்லைக்குள் விழுந்து வெடித்தது. மிகப் பெரிய உயிர்ச்சேதம் ஏற்படுத்தும் திட்டத்துடன் இந்த ராக்கெட் தாக்குதலை தீவிரவாதிகள் நடத்தி உள்ளளதாக தெரிகிறது.

தாக்குதல் நடத்திய தீவிரவாதிகள் எந்த அமைப்பை சேர்ந்தவர்கள் என்று தெரியவில்லை.

Source & Thanks : .newindianews

Leave a Reply

Your email address will not be published.