இஸ்ரேலிடம் இருந்து ஆறு சுப்ப டோராக்களை கொள்வனவு செய்ய சிறிலங்கா திட்டம்

இஸ்ரேலிடம் இருந்து சுப்ப டோரா படகுகள் ஆறை சிறிலங்கா அரசு கொள்வனவு செய்யவிருக்கின்றது. இந்தியாவுக்கும் சிறிலங்காவுக்கும் இடையிலான கடற்பரப்பில் இடம்பெறும் கள்ளக் கடத்தல்களைத் தடுப்பதற்காகவே இவற்றைக் கொள்வனவு செய்யவிருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

சுப்ப டோரா எம்.கே. ரக சுற்றுக்காவல் படகுகள் ஐந்து வருடங்களுக்கு முன்னர்தான் சேவையில் ஈடுபடுத்தப்பட்டு வெற்றிகரமானவை என்பது உறுதிப்படுத்தப்பட்டது. நான்கு அடி ஆழமான நீரில் கூட இந்த படகுகளைப் பயன்படுத்த முடியும் என்பதால் கொமாண்டோ அணியினரை கடற்கரையில் கொண்டுவந்து இறக்குவதற்கும் ஏற்றிச் செல்வதற்கும் மிகவும் வசதியான படகாக இது கருதப்பட்டது.

20 மி.மீ. பல்குழல் துப்பாக்கிகளையும், 40 மி.மீ. தன்னியக்க கிரனைட் லோஞ்சர்களையும் கொண்டுள்ள இந்தப் படகுகளில் ஒன்பது போர் பயணம் செய்ய முடியும் எனத் தெரிவிக்கப்படுகின்றது. 70 தொன் எடையுள்ள இந்தப் படகில் மணித்தியாலத்துக்கு 90 கிலோ மீற்றருக்கும் அதிகமான வேகத்தில் செல்ல முடியும் எனத் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.

Source & Thanks : puthinam

Leave a Reply

Your email address will not be published.