இலங்கையில் இடம்பெயர்ந்த மக்களிடையே மூளைக்காய்ச்சல் பரவியுள்ளது

இலங்கையின் வடக்கே இடம்பெயர்ந்துள்ள மக்கள் மத்தியில் மூளைக்காய்ச்சல் தொற்று நோய் பரவுவது அவதானிக்கப்பட்டிருக்கின்றது.

கடந்த 3 மாதங்களில் இதனால் பாதிக்கப்பட்ட 64 பேரில் 34 பேர் உயிரிழந்துள்ளதாக வவுனியா அரச மருத்துவமனையைச் சேர்ந்த வைத்திய நிபுணர் மகேஸ்வரன் உமகாந்த் கூறுகின்றார்.

உயிரிழந்தவர்களில் 24 பேர் இளவயதினர் என்றும், வைரஸ் மூலம் தொற்றுகின்ற இந்தநோயைக் கண்டுபிடிப்பதற்கான வசதிகள் வவுனியாவில் இல்லாத நிலையில் கண்டியில் உள்ள வைத்திய நிபுணர்களின் உதவியோடு இந்த நோயை ஆரம்ப நிலையில் அடையாளம் காண்பதற்கான வசதிகள் தற்பொழுது கிடைத்துள்ளதாகவும் அவர் கூறுகின்றார் இதுபற்றிய மேலதிக தகவல்களை இன்றைய செய்தியரங்கத்தில் கேட்கலாம்.

Source & Thanks : bbc.co.uk

Leave a Reply

Your email address will not be published.