வளர்ந்து வரும் வல்லாதிக்த்தின் இரும்புப்பிடியில் சிறீலங்கா எனும் அப்பளம்.

ஆசியக்கண்டத்தை சுனாமி தாக்கியபோது தவிக்காத நெஞ்சம் இருந்ததா..

ஆழிப்பேரலை இலங்கையின் கரைதொட்டபோது காணாமல்போனது 30,000 உயிர்கள். நொடிப்பொழுதில் வந்து சென்ற அலை அவர்கள் மூச்சையும் கொண்டு சென்றது. அவர்கள் கடைசி அத்தியாயம் நொடிப்பொழுதில் கரைந்துபோனது.

உலகின் முன்னணி ஊடகங்கள் அனைத்தும் 24 மணிநேரமும் 7 நாட்களும் சுனாமியின் கொடூரங்களை காட்டி கதைத்தபடி இருந்தது. பிரபலங்கள் முதல் விளையாட்டு வீரர்கள் வரை உயிரும்; உடமையும் இழந்தவர்களின் வலி அறிந்து, அவர்களுக்கு உதவச்சொல்லிய வண்ணம் இருந்தனர். நாமும் மூட்டை மூட்டையாய் உதவிப்பொருட்களை அனுப்பினோம். இந்த சுதந்திர உலகில் தேசங்கள் பல, எந்த நாடு, இன்றும் தமிழ் மக்ளளை இரண்டாம் தர குடிமக்களாக வாழச்சொல்கிறதோ அந்த நாட்டிற்கு கோடிகளை கொட்டிக்கொடுத்தது தமிழர்களுக்கு உதவ.

ஆனால் ஆயிரம் ஆயிரம் பெண்களையும் குழந்தைகளையும் சிறீலங்கா எனும் கொலைக்களத்திலே கொன்றபோது இந்த உலகம் மௌனி ஆனது.

மீண்டும ஒரு பேரழிவு அந்த மக்களைத் தாக்கியது அது திருட்டுத்தனமாக பல வல்லாதிக்கங்கள் செய்துகொண்ட ஒப்பந்தங்களாலும், வழிநடத்தல்களாலும் விளைந்த போர். மனித குலம் என்றும் பார்த்திராத அளவு 50,000 அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்டனர். 30,000 சிறுவர்களும், பொதுமக்களும் தங்கள் உடல் உறுப்புக்களை இழந்த பேரவலம் நிகழ்ந்தது. கண்ணீர்த்துளி போன்ற பூகோள அமைப்பு கொண்ட அந்த தீவில் ஆசியாவின் சுனாமி ஏற்படுத்திய பாதிப்பைக் காட்டிலும் கொடூரமான விளைவுகளை இந்தப்போர் விளைவித்தது.

ஆண்களும் பெண்களும் குழந்தைகளும் மாதக்கணக்கில் உணவின்றி மருந்துகள் இன்றி குண்டுக்காயங்களோடு பதுங்கு குழியிலேயே வாழ வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டனர். அப்பாவித் தமிழ் மக்கள் சீனாவின் கு7 துப்பாக்கிகளுக்கும், ர~;யாவின் ஆஐபு விமானத்திற்கும் இரையானார்கள். கனரக ஆயுதங்களும் தடைசெய்யப்பட்ட ஆயுதங்களும் அந்த உதவியற்ற மக்களையும் குழந்தைகளையும் பொசுக்கியது.

அப்பாவித் தமிழ் மக்கள், தன் செந்தங்கள் துடிதுடித்து சாவதைப் பார்த்தபடி தன் மரணத்தை எதிர்பார்த்து வாழலாயிற்று. மருத்துவ மனைகளில் உள்ள காயமடைந்தவர்களும் கூட மழைபோல் கொட்டும் கொத்தணிக்குண்டுகளுக்கு இரையானார்கள். வெளிப்படையாகவே அந்த மக்களுக்கு செல்லும் உணவும் மருந்துப்பொருள்களும் தடைசெய்யப்பட்டது. பெண்களும் குழந்தைகளும் நொடிக்கு நொடி மரணவேதனையை அனுபவித்த வண்ணம் இருந்தனர்.

சில வல்லாதிக்கத்தின் விருப்பத்திற்காக இந்த மனிதன் ஏற்படுத்திய சுனாமியை ஒளிபரப்ப எந்த மேற்கத்திய செய்திநிறுவனங்களும் வரவில்லையே?

நிதம் வறுமை ஒழிப்பு மனித உரிமை பற்றிப்பேசும் விளையாட்டு வீரர்களும், பிரபலங்களும் இந்த மனித அவலத்தைக் கண்டிக்க ஒருவிரலையேனும் உயர்த்தினார்களா?

தப்பான இடத்தில் இருந்தவரகளின் தப்புத் தாளத்திற்கு நடனமாடியதே ஒழிய இந்த ஐ.நாவின் ஊழல் அதிகாரிகள் அப்பாவித்தமிழர்களைக் காப்பாற்ற தவறிவிட்டனர்.

ஐ.நாவும் மற்ற பல சர்வதேச அமைப்புகளும், தாக்குதலுக்கு உள்ளாகி இருக்கின்ற மக்களை காப்பாற்றுவதை விடுத்து அந்த இன அழிப்புப்போரை, தானே நடத்துவது போன்ற ஒரு தோற்றத்தை அல்லவோ ஏற்படுத்தியது. போரை நிறுத்தும் வல்லமையும் அதிகாரமும் படைத்த சிலர் அதைச் செய்யத் தவறினார்கள். செய்யத்தவறினார்கள் என்பதைவிட செய்யவிரும்பவில்லை என்பதே உண்மை.

சில ஜனநாயக வாதிகளும், மிகப்பெரிய ஜனநாயக நாட்டிற்கு தலைவர்கள் என்ற அடைமொழியோடு திரிபவர்கள் எல்லாம் போர் நடக்கும் போது பேசிய விதம் நிலைமைக்கு சற்றும் பொருந்தாத, யாரோ வேற்றுக்கிரக வாசிகள் எழுதிக்கொடுத்த வசனங்களுக்கு நடிப்பது போலத்தான் தோன்றியது.

ஐ.நாவின் தலைவர் உட்பட பலரும் பேசவேண்டிய நேரங்களில் ஊமையாகிப் போனார்கள் ஐ.நாவின் மூத்த அதிகாரியான விஜய் நம்பியார் உட்பட பலரும் பலமுறை இலங்கை சென்றார்கள். போரை நிறுத்த தவறியதன் மூலம் அவர்களுக்கு பணிக்கப்பட்டதை சரியாக செய்துமுடித்தார்கள்.

அவர்கள் பணியிலிருந்து அப்பட்டமாக விலகி நின்றதோடு மனித குலமே ஏற்கமுடியாத தவறுகளைச் செய்த அரசுக்கு துணை நின்றார்கள் என்பதுதான் வேதனை.

இந்தியாவில் இருந்து சென்றவர்கள் எல்லாம் அங்கே போரை நிறுத்தவும் பட்டினியால் சாகும் மனித அவலத்திலிருந்து அந்த மக்களைக் காக்கவுமா? இல்லை தாங்கள் சொல்லிய போர்த்தந்திரங்கள் சரியாக செயல்படுத்தப்படுகிறதா, அடுத்த கட்டமாக நாங்கள் என்னசெய்யவேண்டும் என்பதைக்கேட்டு, அவர்களைப் பாராட்டி வரவே சென்றனர்.

இந்திய அதிகாரிகளின் நோக்கம் எல்லாம் பிரபாகரன் என்னும் அந்த மக்கள் தலைவன் கொல்லப்பட வேண்டும், அல்லது கொல்லப்பட்டார் என்ற செய்தியோடு அதற்கான மரணச்சான்றிதழ்கள் வேண்டும். அப்படி செய்வதன் மூலம் நாங்கள் ஒரு தீவிரவாதத்திற்கு எதிராக செயல்பட்டோமே ஒழிய இனப்படுகொலைக்கு துணைநிற்கவில்லை என்றும், சிறீலங்கா கடலோரப்பகுதியில் காணப்படுகின்ற எண்ணெய் வளத்திற்கு எங்களுக்கும் உரிமை உண்டு என்று இந்த உலகிற்கு தம்பட்டம் அடிக்க நினைத்தது.

இந்நிலையில் டேவிட் மில்லிபாண்ட் என்பவர் மட்டும் தொடர்ந்து மனித அவலத்திற்கு எதிர் நின்றார். தடைசெய்யப்பட்ட ஆயுதங்களால் ஏற்பட்ட உயிர்நாசங்களை ஆதாரத்தோடு சிங்கள அரசை நோக்கி கேள்வி எழுப்பினார். அங்கே நடக்கும் கொடுமைகளை சாடினார் பேரினவாத வன்செயல்களை உலகிற்கு சொல்லிவந்தார். ஆனால் சிறீலங்கா அரசு வழமைபோல் அவரையும் வெள்ளைப்புலி என்றும் மஞ்சள் புலியென்றும் காக்கிப்புலி என்றும் அவரவர் தோல்நிறத்திற்கேற்ப சாடிவந்தது.

தீவிரவாதத்திற்கு எதிரான போர் முடிந்தாலும் இனப்படுகொலை இன்றும் தொடர்கிறது.

சிறீலங்கா அரசு பிரபாகரன் அவர்களை கொன்றுவிட்டதாகவும், அந்த இயக்கத்தைச் சேர்ந்தவர்களைக் கூண்டோடு அழித்துவிட்டதாகவும் அறிக்கை விட்டு ஆனந்தப்படுகிறது. அவர்கள் சொற்படி தீவிரவாதம் முற்றாக அழிக்கப்பட்டு விட்டது.

ஆனால் களம் சொல்லும் கதையோ வேறாக உள்ளது. போர் முடிந்தது ஆனால் கொலைகள் ஓயவில்லை, மரண ஓலங்கள் ஓயவில்லை. சிங்கள அரசு தமிழர்களை விடுவதாய் இல்லை. ஒவ்வொரு தமிழ்க்குழந்தையும் பெண்களும் ஆண்களும் சந்தேகத்திற்குரியவர்கள் என்கிறது இராணுவம். அங்கே இன்றும் அமுலில் உள்ள அவசர கால சட்டத்தின் படி எந்தத் தமிழனை வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் கைது செய்யலாம். ஏன் சந்தேகத்திற்கு உரியவர் என்று சுட்டும் கொல்லலாம். இப்போது சிறீலங்காவில் ஒரு தமிழனாக வாழ்வது ஆயிரம் ஆயிரம் நாகங்கள் கொட்டப்பட்ட பள்ளத்தாக்கு மேலே கயிற்றில் நடப்பது போன்று உள்ளது.

தீவிரவாதத்திற்கு எதிரான போர் என்ற புனைபெயருடன் நடந்த இனப்படுகொலை நம் கண்ணுக்கு முன்னால் ரத்தக்களரியாகி முடிந்துவிட்டது. ஆனால் கொலைகள் தெடார்கின்ற இந்தநேரத்திலாவது போர் சரியான விதிமுறைகளோடு தான் நடந்ததா என்று ஒவ்வொருவரும் கேள்வி எழுப்பவேண்டும். இந்தப்பூமிப்பந்தில் எந்தப்பகுதியை ஆளும் அரசும் தனி மனிதனைக் கொல்ல சிங்கப்பூரைப் போன்று இரண்டு மடங்கு நிலப்பரப்பை போர்க்கோலமாக்கி, 50 ஆயிரம் உயிரைக் குடித்து, 30 ஆயிரம் பேரை ஊனமுற்றவர்களாக்கிய மனித அவலத்தை செய்ததே இல்லை.

சிறீலங்கா 1948 ஆம் விடுதலைபெற்று அரசமைத்தபோதே தமிழினப்படுகொலையயையும் தொடங்கியது இந்த இனப்படுகொலை தமிழர்கள் தனக்கென்று தனிநாட்டைப் பெறும்வரை ஓயப்போவதில்லை.

தமிழர்கள் கூட்டம் கூட்டமாகக் கொல்லப்பட்டதை இந்த உலகம் எப்படிப்பார்க்கிறது?

47 நாடுகள் சிறீலங்கா விவகாரத்தில் தங்கள் நிலைப்பாட்டை விளக்க வாக்களித்தார்கள். அதில் பெரும்பாலானவர்கள் சிறீலங்கா அரசிற்கு ஆதரவாக வாக்களித்ததோடு அங்கே நடப்பது, நடந்தது உள்நாட்டு விவகாரம் என்று கூறியது. விடுதலைப் புலிகளை அழித்ததற்கு வாழ்த்துத் தெரிவித்ததோடு, சிறீலங்கா மீது எந்த வித போர்க்குற்ற விசாரணையும் தேவையற்றது என்று கூறியது.

ஐக்கிய நாடுகளின் மனித உரிமை கவுன்சில் அதன் நம்பகத் தன்மையை முற்றிலுமாக இழந்து விட்டது. எந்தக் காரணங்களுக்காக அந்த அமைப்பு இயங்கி வந்ததோ அந்தக் காரணங்களிலிருந்து முற்றாக விலகிநிற்கிறது.

சிறீலங்காவிற்கு ஆதரவாக பெரும்மாலான நாடுகள் வாக்களித்ததன் மூலம் ஒன்றை மிகத்தெளிவாக விளக்கியுள்ளது. அது சிறீலங்கா, தமிழர்களுக்கு எதிராக எத்தனை பெரிய மனித அவலத்தை செய்தாலும் நாங்கள் சிறீலங்காவிற்கு தோளோடு தோள் நிற்போம். ஏனெனில் எங்களுடைய வைப்பறைகளிலும் எலும்புக்கூடுகள் இருந்திருக்கிறது.

எனவே சிறீலங்கா அரசு தமிழ்க் குழந்தைகளையும், பெண்களையும், குண்டுகளுக்கு இரையாக்கினாலும், பட்டினி போட்டு கொன்றொழித்தாலும், காயம் அடைந்தவர்களுக்கு மருந்துப்பொருட்களை தர மறுத்தாலும் ஏன் அத்தனை தமிழர்களையும் கொன்று குவித்து ஒரே குழியில் புதைத்தாலும் நாங்கள் அந்த தீவிரவாத சிங்கள பேரினவாத அரசுக்கு துணைநிற்போம். நாங்களும் அந்த அரசும் ரகசியமாக செய்த ஒப்பந்தங்களும் சொந்த லாபங்களுமே எங்களை வழிநடத்தும் என்பதே ஆகும்.

இதுதான் இந்த உலகின் நிலை. பெரும்பாலான நாடுகள் மனித உரிமை பற்றி கவலைப்படுவதாக தெரியவில்லை. அவர்கள் நோக்கமெல்லாம் தங்கள் தங்கள் பேராசைகளை நிறைவேற்றிக் கொள்வதில்தான் மையம் கொண்டுள்ளது.

இந்த அவசரமான சூழலில், நெருக்கடி நிலையில் உயிர்களைக் காப்பாற்ற வேண்டிய தருணத்தில் வாக்கெடுப்பு நடத்தி அதில் பெரும்பாலானவர்கள் வாக்கு யார்பக்கம் இருக்கிறது என்று பார்த்துத் தான் உயிரைக் காப்பாற்ற வேண்டும் என்று கூறும் இவர்கள் சட்டம் எனக்கு வியப்பை அளிக்கிறது.

ஒரு கட்டிடம் எரிகின்ற போது அந்ததீயில் மாட்டிக்கொண்ட உயிர்களை காப்பாற்ற நினைப்போமா? இல்லை என்ன செய்யச்சொல்லி பெரும்பாலானவர்கள் வாக்களித்திருக்கிறார்கள் என்று பார்த்து முடிவெடுப்போமா?

மூழ்கிற கப்பலை காப்பாற்ற வாகெடுக்கும் சட்டத்தை, எந்த எந்த மூடனாவது முன்வைப்பானா? அப்படியே இருப்பினும் நம் இதயங்கள் கப்பலில் தவிக்கும் உயிர்களை காக்க நினைக்குமா அல்லது வாக்குப்போட வரிசையில் நிற்குமா?

நாஜிப்படைகளின் முகாம்களைப்போல சிறீலங்காவிலே தமிழர்கள் கொல்லப்படுவதை இனியாவது ஐ.நா தடுத்து நிறுத்த வேண்டும். ஆனால் அந்த நாட்டு சிறுபான்மையினரை கொன்று குவிக்கும் சிங்கள பேரினவாத அரசுக்கு துணைநின்று தூபம் காட்டுவது மனித குலத்திற்கே ஒரு பெரும் அவலம்.

இரத்தக் காடாகாமல் தடுத்திருக்க முடியுமா?

ஆம் என்பது தான் பதில். ஆனால் இந்த இன அழிப்புப்போரினால் லாபம் அடைந்தவர்கள் அதை விரும்பவில்லை. எத்தனை குழந்தைகள் கொல்லப்பட்டாலும், இறுதிவரை அந்தப்போர் நடத்தப்பட Nவுண்டும் என்பதே அவர்கள் எண்ணமாயிருந்தது. சீனாவும், இந்தியாவும், பாகிஸ்தானும் காலங்காலமாய் எதிரிகாளய் இருந்தும் இந்த விடயத்தில் நண்பர்களாயினர். பிணந்தேடி அலையும் கழுகு போல பறந்தனர். கிடைக்கும் கறியில் ஆளுக்கொரு துண்டு என்று ஒப்பந்தம் போட்டுக்கொண்டனர்.

சிலர் பேசினார்கள்…
இங்கு ஒரு வார்த்தையும், அங்கு ஒரு வார்த்தையும். ஆனால் அங்கே நடப்பது இனப்படுகொலை அது தடுத்து நிறுத்தப்படவேண்டும், கொலை வெறி அரசுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவேண்டும், என்று எழுந்து நின்று ஆண்மையோடு சொல்ல ஒரு தலைவர்களும் இல்லை. சொல்லுகின்ற அதிகாரம் படைத்தவர்களெல்லாம் பேசாமல் இருந்தது தான் வெட்கக்கேடு.

ஐ.நா நித்தம் தனது அறிவிப்புப் பலகையில் இறப்பின் எண்ணிக்கையை குறித்துக்கொண்டிருந்ததே ஒழிய, இறப்பு எண்ணிக்கை நாள் ஒன்றுக்கு 1000த்தை தொட்டபோது கூட வாய் திறக்கவில்லை.

அமெரிக்க செயற்கைக் கோள்கள், அப்பாவித் தமிழர்கள் கொல்லப்பட்டதை அந்;த இரத்தக் குளியல்களை படம் பிடித்ததே ஒழிய, கொல்லப்படுவதை நிறுத்த நடவடிக்கை எடுக்கவில்லை. இந்த் உலகின் இதயம் இரும்பாகிப்போனது, பேராசைப் பேய்கள் லாபம் காணுவதற்காக.

மனித உரிமைப்பாதுகாவலர்கள் என்று சொல்லிக் கொள்பவர்கள் எல்லாம் இந்த அவலத்தை தங்கள் காலை உணவுக்கு மத்தியில் கேட்டுவிட்டுச்சென்றனர். அவர்களுக்கு இந்த இறப்புகளளெல்லாம் கதைகேட்பது போல இருந்தனவே ஒழிய அந்த மக்களைக் காக்க வேண்டும் என்று தோன்றவில்லை. மனித உரிமைப் பேரறிஞர்கள் எல்லாம் தங்கள் கட்டுரைகள் என்று பிரசுரிக்கப்படும் என்பதில் கவனம்கொண்டனரே அன்றி அந்த மக்களை காக்க வேண்டும் என்று என்னியதாக தோன்றவில்லை

கொல்லப்படும் அந்த மக்களின் அயல்நாடு வாழ் உறவுகள் வீதிக்கு வந்தார்கள் கதறினார்கள்,கெஞ்சினார்கள் மன்னர்களுக்கும் ராணிகளுக்கும் முன்பு அவர்கள் மண்டியிட்டு கதறினார்கள் ஆனால் அந்த செவிட்டு காதுகளுக்கு அந்த மக்களின் ஓலம் கேட்கவேயில்லை, இரும்பு இதயங்களுக்கு அவர்கள் துயரம் புரியவேயில்லை. அவர்கள் எவ்வாறு எல்லாம் முடியுமே அவ்வாறு எல்லாம் முயன்றனர், அங்கே நடக்கும் அவலம் சொல்ல. ஆனால் அவர்கள் துயரம் துடைக்க நினைப்பதை விடுத்து வீதிகளை விட்டு அகற்றுவது எப்படி என்று தான் நினைத்தனர். எங்கள் வானொலியிலும் அதையே சொன்னார்கள்

இப்போது நாங்கள் மகிழ்ச்சியாக இருக்கிறோம் இப்போது வீதிகளில் பேரணிநடத்த போவதில்லை. ஏனெனில், யாருடைய உயிர்களை காப்பாற்ற சொல்லி அவர்கள் பேரணி நடத்தினார்களோ அவர்களில் பெரும்பாலானவர்கள் இறந்து விட்டார்கள்.

இந்தப்போர் பல நாடுகளின் முழு ஆதரவோடு நடந்து முடிந்திருக்கிறது என்பது தெளிவாக தெரிந்த ஒன்று.யார் திவிரவாதிகள் என்று சொல்லி போரை நடத்தியதோ அவர்கள் போரை நிறுத்திக் கொல்வதாக அறிவித்த பின்னராவது இந்த உலகம் போரை நிறுத்தியதா? போர் முடிவதற்க்கு முன்னரே போரின் பங்குதாரர்கள் அதன் லாபக்கணக்கில் சீனாவாலும் சிறீலங்கா ஒரு அப்பளம் போல கையாளப்பட்டிருக்கிறது. தங்கள் தங்கள் நாடுகளுக்கு சிறீலங்கா தீவின் பிரதேசங்களில் என்னென்ன லாபம் அடைய முடியுமோ அதை இந்த போரினால் பெற்றுவிட்டது இந்தியாவும், சீனாவும்.

மெல்ல மெல்ல அந்த தீவிலிருந்து கொன்றொழிக்கப்படும் தமிழ் சமுதாயத்தை தவிர அனைவரும் மகிழ்ச்சியோடு இருக்கின்றனர்

குண்டுகள் விழுந்து களங்கிய குட்டையில் சீனா மின்பிடிக்க நினைக்கிறது. யார் வலிமையானவனோ அவனுக்கு நாசகர ஆயுதங்களை கொடுத்ததன் மூலம், தன் போராசையை சிறப்பாகவே நிரைவேற்றிக் கொண்டது. சிறீலங்காவில் தன் கட்டுமான பணிகளை ஆரம்பித்ததோடு தன் கடற்ப்படை பயன்பாடடிற்;;காக ஒரு துறைமுகத்தையும் நிறுவிக்கொண்டது.

இந்தியாவோ ஏற்கனவே சிறீலாங்கா கடற்பறப்பில் காணப்படும எண்ணை வளங்களை தன் வசப்படுத்த, திட்டமுன்வரைவுகளை தீட்டியோதடு அல்லாமல் கீழக்கு மற்றும் வடக்கு பகுதிகளில் கட்டுமான பணிகளை தன் வசப்படுத்த முயற்சிகள் மேற்கொண்டுள்ளது.

பாக்கிஸ்தானும் சீனாவும்ள நாசகர ஆயுதங்களை வழங்கிய போதும போருக்கான திட்டவரைவுகளை தீட்டுவதிலோ,அதை செயல்படுத்துவதிலோ இறங்கவில்லை.

தற்போது சிறீலங்காவின ஜனாதிபாத நாங்கள சீனா மற்றும் பாக்கிஸ்தானின ஆயுதங்களைக் கொண்டு இந்தியாவின் போரை நடத்தியுள்ளோம் எனக்கூறியதிலிருந்து, இந்தப் போரில் இந்தியாவின பாங்கு என்னவென்பது புரிகிறது.இந்தியாவின் முன்னால் ராணுவ அதிகாh ஒருவர்கூட இலங்கை தமிழர்களின் ரத்தம் இந்தியாவின் கரங்களிலும் படிந்துள்ளது என்று கூறியுள்ளார்.

சிறீலங்காவில் நடந்த போர் திவிரவாதத்திற்கு எதிரானதில்லை.அது அம் மக்கள் தலைவனின் பெயரைச் சொல்லி,வெற்றியைக் கொண்டாடி பலரின் மூலைக்குள் படமெடுத்து ஆடிக்கொண்டிருக்கும் பல விசபாம்புகளை மறைக்கத்தான்.

சிறீலாங்காவின் போர்க்குற்றங்கள்.

சதாம்உசைன, குர்தி~; இன மக்களுக்கு எதிராக செய்த போர்க்குற்றங்களைக்காட்டிலு�

�் பல மடங்கு கொடூரமானது சிறீலங்காவில் நடந்த போர் வெள்ளைக்கொடியேந்தி வந்த புலிகலின் பிரதிநிதிகளையும்,ஆயிரம்மாயி�
��
��ம் மக்களையும் கொண்ற குற்றத்திற்கு,ராணுவ வீரர்கள் மட்டும் காரணம் அல்ல.கயவர்களாகிப்போன இந்தியாவின் ராணுவ அதிகாரிகளும் இந்திய அரசியல் வாதிகளும் ஐநாவும் தான் பொறுப்பு.

தடைசெய்யப்பட்ட ஆயுதங்களை (கொத்தணிக்குண்டுகள்,வெண்பாஸ்
பரஸ் குண்டுகள்) பயன்படுத்தி அப்பாவி குழந்தைகளையும், பெண்களையும், வயதானவர்களையும் கொண்றிருக்கிறார்கள்.தாக்கப்�
��
��ட்ட மருத்தமனைகளே தொடர்ந்து தாக்கப்பட்டிருக்கிறது. வீடுகளும் கட்டிடங்களும் சக்திவாய்ந்த குண்டுகளால் நாசமாக்கப்பட்டிருக்கிறது.

அப்பாவி மக்கள் மாதக்கணக்கில் பதுங்கு குழிகளில் வாழ்வேண்டிய சுழலுக்க உட்படுத்தி அவர்களுக்கு அனுப்பபட்ட மருந்துப்பொருட்களும் உணவும் தடைசெய்ப்பட்டிருக்கின்றது.

இன்னும் கூட பல சாட்சியங்கள் மறைக்கப்பட்டுக்கொண்டிருக்க�

�ன்றது.

50000-ம் உயிர்களைக் கொண்ரு,30000-ம் பேரை ஊணமாக்கி,சொந்த வீடுகள் இருந்தும்,3 லட்சம் மக்களை தடுப்புமுகாம்களில் அடைத்திருப்பதை யாரும் மனிதாபிமான செயல் என்று சொல்லமாட்டார்கள்.

சிறீலங்கா செய்தது மிகப்பெரிய போhக்குற்றம்மென்பதை அவர்களே அறிவார்கள்.அதனால்தான் தான் குற்றங்களுக்கான தடையங்களை அழிக்கும் பணியில் அந்த மக்கள் தான்.ஆதனால் தான் ஊடகவியளாலர்கள் யாரையும் இடம்பெயர்ந்திருக்கும் அந்த மக்களைக் காண அனுமதிக்கவில்லை சிறீலங்கா அரசு.இந்த மிகப்பெரிய போருக்கு மத்தியில்,அந்த மக்களைக் காக்க 3 மருத்துவர்கள் மட்டும் போராடினார்களே,அவர்களை சர்வதேச சமூகம் ஒரு மாவீரர்களாகத்தான் பார்கிறது.ஆனால் சிறீலங்கா அரசோ தங்கள் குற்றங்களை மறைக்க அவர்களை சிறையில் அடைத்திருக்கிறது.

போர் முடிவடைந்து ஒரு மாதம் ஆனபின்பும் கூட அங்கே பத்திரிக்கையாளர்களை அனுமதிக்கவில்லை.போர் முடிந்ததாகவும,; மக்கள் மீட்கப்பட்டதாகவும் அறிவித்தபின்னருங்கூட ஆயிரக்கணக்கில் மக்கள் களத்தில் காயங்களோடும்,பதுங்குகுழிகளு�
��
��்குள்ளும் மரணப்பயத்தின் பிடியில் கிடக்கின்றனர்.

இன்னுங்கூட பத்திரிக்கையாளர்கள் அனுமதிக்காமல்,கொல்லப்பட்ட ஆயிரக்கணக்கான உடல்களை ஓரே புதைக்குழியில் போட்டு முடினால் கண்டுபிடித்துவிடக்கூடும் என்று என்னியோ என்னோவோ உடல்களை அப்புரப்படுத்துமாறு உத்தவிட்டிருக்கிறார்.

அந்த மக்களின் தலைவனான பிரபாகரனின் உடலை எரித்து கடலில் கரைத்திருப்பதாக சொல்லியதிலிருந்து. அதே முறையை தான் ஆயிரம்மாயிரம் கொலைகளை மறைக்க பயன்படுத்தியிருக்கும் என்று தெரிகிறது.

கடைசி நேரம் வரை அந்தபகுதியோடு தொடர்புகள் தெளிவாகவே இருந்திருக்கிறது செயற்கைக்கோள்கள்தொடர்ந்து புகைப்படம் எடுத்து வந்திருக்கிறது. எனவே இலங்கை அரசு இடம்பெயர்ந்த மக்களை மிரட்டி பேசாமல் இருக்கசெய்வதன் மூலம் உண்மைகளை மறைத்துவிடமுடியாது கடல் வழியாக தப்பித்த மக்கள் சாட்சியாக உள்ளனர். கோடிக்கணக்கில் போர் குற்றத்திற்;கான சாட்சிகள் இருக்கின்றது.குற்றவாளிகள் எதை செய்தும் தப்ப முடியாது குற்றவாளி கூண்டில் நின்றே தீரவேண்டும்

கொடுர தடுப்பு முகாம்கள் தமிழ் குடிமக்களுக்கு மட்டும்.

இலங்கை ராணுவம் குண்டுப்போட்டு 50 ஆயிரம் உயிர்களை கொண்றிருக்கிறது. இப்போது 3 லட்சதிற்கும அதிகமான மக்களை; நாஜிபடைகளின்
தடுப்பு முகாம்களையொத்த முகாம்களில் தடுத்து வைத்திருக்கிறது.

நித்தம் 10 முதல் 14 வரை மக்கள் இறப்பதாகவும், இறப்பவர்களில் பெறும்பாளானோர் குழந்தைகளும் முதியோர்களும் என்று கூறுகின்றனர். தடுத்து வைக்கப்பட்டிருப்போர்களுக்க�

� உணவும் மருந்துப் பொருட்களும் வழங்ப்படுவதில்லை. தடுத்து வைக்கப்பட்டிருப்வர்கள் அவர்களது உறவினர்களை சந்திக்கவோ அவர்கள் அன்புகுறியவர்கள் தரும் உணவுப்பொருட்களையோ உடைகளையோ வாங்க அனுமதிக்கப்படுவதில்லை

இது மீண்டும் நிகழக்கூடுமா?

இலங்கையில் போரை நடத்தியது இந்தியா. அதற்கான ஆயுதங்களை வழங்கியது சீனாவும் பாகிஸ்தானும். இலையெல்லாம் தெரிந்தும் ஐ.நாவும் மேற்கத்திய நாடுகளும் அமைதி காத்தது

இதைப்போன்ற ஒரு மனித அவலத்தை எதிர்காலத்தில் மீண்டும் நிகழ அனுமதிக்கப்போகின்றோமா? சில நாடுகளின் பேராசைகளை நிறைவேற்ற இத்தனை ஏதுமறியாத அப்பாவி மக்கள் கொல்லப்பட வேண்டுமா.

இலங்கைத் தலைவர்கள் தூங்குகின்ற பூதங்களின் கைகளில் அப்பளம் போல் ஆகியுள்ளனர். இந்தப்போரை இயக்கியவர்களும் நீதிமன்றத்தின் கூண்டுகளில் நிறுத்தப்பட வேண்டும்.

இதைப்போன்ற ஓரு போர் எதிர்காலங்களில் நிகழுமாயின் அதை ஐ.நா தடுத்து நிறுத்தும் என்ற நம்பிக்கை இப்போது முழுதாக இழக்கப்பட்டுவிட்டது.

இப்போது தன்னிச்சையாக செயல்படக்கூடிய, போரைத் தடுத்து நிறுத்தும் அதிகாரம் உள்ள அமைப்பு ஒன்று புதிதாக உருவாக்கப்பட வேண்டியது அவசியமாகிறது.

குற்றவாளிகள் கூண்டில் ஏற்றப்படாதவரை, ஐ.நா இதைப்போன்ற போர்களை தடுத்து நிறுத்துவதற்கு தனி அதிகாரங்களை பெற்ற அமைப்பாக உருப்பெறும் வரை இலங்கையில் மட்டுமல்ல உலகின் ஏதோ ஒரு மூலையில் இதைப்போன்ற குற்றங்கள் தொடரும்.

இலங்கை இப்போது தொடர் கண்காணிப்பில் உள்ளது.

இலங்கையின் சொற்படி கலகம் விளைவித்த தலைவர்கள் கொல்லப்பட்டு விட்டார்கள். விடுதலைப்புலிகள் அழிக்கப்பட்டு விட்டார்கள். அவர்களோடு 50,000 தமிழர்களும் கொன்றுகுவிக்கப்பட்டனர்.

இப்போது எல்லோரும் எந்த வெற்றியை கிழக்கு மற்றும் வடக்கில் தமிழர்களின் பகுதியில் சிங்களக் குடியேற்றத்தின் மூலமாக சிங்கள மயமாக்கலுக்கான முயற்றசி இவையெல்லாம் மேலும் அதிகளவிலான உயிர் நாசத்திற்கு வழி வகுக்குமேயன்றி அமைதிக்கு வழிவகுக்காது.

இது இலங்கையை மட்டும் நிர்மூலப்படுத்தாது சர்வதேசத்திற்கே ஓர் அச்சுறுத்தலாக அமையும்.

இவை விளக்கும் உண்மை.

இலங்கையின் அதிகாரிகள் இந்தியாவின் போரைத்தான் நாங்கள் நடத்தியுள்ளோம் என்று சொல்லியிருக்கின்றனர். பெரும்பாலான அவர்களின் குற்றங்கள் வாய்மொழியாக ஒத்துக்கொண்டிருக்கிறார்கள்.

ஒன்றுக்கொன்று போட்டியிட்டுக்கொண்டு வளர்ந்து வரும் வல்லாதிக்கங்கள் இலங்கையை அப்பளம் போல் பாவிக்கின்றது. இலங்கையின் எல்லைப்பிரச்சினை இன்று சர்வதேசப் பிரச்சினையாகப் பார்க்கப்படுகின்றது.

இலங்கையின் தோள்கள் அதன் புதிய நண்பர்களால் வலுப்படுத்தப்பட்டிருக்கிறத�

�. மேற்கத்திய நாடுகளிடம் மண்டியிட்டு நின்ற இலங்கை இன்று அவர்களையே அச்சுறுத்தும் அளவிற்கு வந்துள்ளது.

ஐ.நாவின் பாதுகாப்பு சபையில் இலங்கை பற்றி விவாதிக்கக் கூட மறுத்துப்பேசியதன் மூலம் இந்தப்போரில் சீனாவின் பங்கு என்ன என்பது தெரிகின்றது.

இந்தியாவும் பாகிஸ்தானும் சீனாவும் ஐ.நாவின் பாதுகாப்பு சபையில் கைகோர்த்து ஓரணியில் நின்றன. அவர்கள் ஒன்றாக இலங்கையின் போர்க்குற்றம் சம்மந்தமாக விசாரிக்கப்படக் கூடாது என்று சொன்னதன் மூலம் அவர்கள் கையிலும் இரத்தக்கறை படிந்திருக்கிறது என்பது தெரிகின்றது.

மனித உரிமைப்பாதுகாவலர்கள் எல்லாம் தங்கள் தங்கள் குடிமக்களுக்கு பாதிப்பு என்றபோது போர்க்கொடி பிடித்தவர்கள் இன்று இந்தப்போரின் மூலமந்திரதாரிகளின் முகங்களைப் பார்த்துக்கொண்டு நிற்கிறார்கள்.

இந்தியா வழிநடத்திய போதிலும் சீனா ஆயுதம் கொடுத்தது உதவினாலும் தங்கள் நாட்டு மக்களைக் கொன்று குவித்தது இலங்கை அரசுதான். ஏற்கனவே சிங்களமயமாக்கப்பட வேண்டும் என்றிருந்த அவர்கள், புதிய நண்பர்களின் வழி நடத்தலோடு சிறப்பாகவே தான் செய்ய நினைத்ததை செய்து முடித்திருக்கின்றனர்.

இத்தனை தமிழர்கள் கொல்லப்பட்ட பின்பு படைகளின் தடுப்பு முகாம்களில் கொடுமைப்படுத்தப்படுவது தொடரவேண்டுமா இல்லையா என்பதை இந்த நாகரிக உலகம் முடிவு செய்யவேண்டிய தருணம் இது.

பல ஆயிரம் உயிர்களைக் காக்க தவறிவிட்டோம் இனியாவது மிச்சம் உள்ள தமிழர்களை தடுப்பு முகாம்களில் வதை படுவதையும், கற்பழிக்கப்படுவதையும், கொலை செய்யப்படுவதையும் தடுக்கவேண்டும்.

இலங்கையின் 60 ஆண்டுகால அரச பயங்கரவாதம்.

பி.பி.சி நிருபர்கள் நூற்றுக்கணக்கான மக்களுக்கு மத்தியில் நின்று தீவிரவாதம் எப்படி ஒழிக்கப்பட்டது என்று பேசிக்கொண்டிருக்கிறார்கள். இன்னும் கூட இந்த உலகம் மக்களை தீவிரவாதிகளாக மாற்றும் விசம் எங்கே இருக்கிறது என்று புரிந்துகொள்ளவில்லை.

அந்த அழகான தீவின் மலைமுகடுளிலும் கடல்களிலும் அரச பயங்கரவாதம் தன் கோர முகம் காட்டி நிற்பதுதான் பிரச்சினைக்கு ஆணிவேர்.
அறுபது ஆண்டுகளுக்கும் மேலாக அந்த அரசு சிறுபான்மையினரான தமிழர்களைக் கொன்றும் எரித்தும் கற்பழித்தும் கொடுமை செய்து வருகின்றது. அவர்களைக் கப்பலில் ஏற்றி வடக்கிற்கும் கிழக்கிற்றும் அனுப்பி வைத்தது. நியாயம் கேட்கும் தமிழர்கள் அடக்குமுறையால் அநியாயமாத் தண்டிக்கப்பட்டனர்.

முத்துக்கள் நிறைந்த இந்தியப்பெருங்கடல் இன்று கொடிய அரக்கர்களின் பூமியாகிப்போனது.

உலகில் தடைசெய்யப்பட்ட ஆயுதங்களையெல்லாம் பயன்படுத்தி அப்பாவி மக்களை கொல்லுகின்ற நேரங்களில் எல்லாம் இலங்கை அரசு குற்றங்களை மறக்க தீவிரவாதத்திற்கு எதிரானபோர் மக்களை மீட்கும் என்ற வார்த்தைகளை ஓயாமல் சொல்லி வந்தது. வெள்ளைக்கொடி ஏந்திவந்நத அந்த இயக்கத்தின் தலைவரகளை சுட்டதோடு இல்லாமல் இன்று கொல்லப்பட்ட தமிழர்களின் உடல்களை எரிப்பதிலும் தடையங்களை மறைப்பதிலும் முழுக்கவனம் செலுத்துகின்றது.

கடைசி நேரத்தில் தடுப்பு முகாம்களிலிருந்து தப்பி வந்தவர்கள் மின்சார வேலிக்குள் அடைக்கப்பட்டிருக்கின்றனர். குழந்தைகள் காணாமல் போகின்றனர். இளம் பெண்களும் ஆண்களும் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்படுகின்றனரே ஒழிய அவரகள் திரும்பி வருவதில்லை.

முத்துக்கடல் என்று வர்ணிக்கப்பட்ட இந்தியப்பெருங்கடல் இன்று ரத்தம் குடிக்க அலையும் காடேரிகளின் பூமியாக மாறியுள்ளது.

இந்த சுதந்நிர உலகின் அறிஞர்கள் பிரச்சினையினி ஆணிவேரை ஆராயவில்லை.

பல இராணுவ ஆலோசகர்களும் அரசியல் பார்வையாளர்களும் தீவிரவாத அழிப்பு ஆலோசகர்களும் இந்த விவகாரத்தில் பிரச்சினையின் ஆரம்பத்தை ஆராய தவறியிருக்கவேண்டும் அல்லது இந்த நூற்றாண்டின் மிகப்பெரிய மனித அவலத்தை நிகழ்த்திய பிரச்சினையை இவர்களே முன்நின்று நடத்தியிருக்கவேண்டும்.

எந்தவொரு கலவரத்தையும் தீவிரவாதத்தையும் அடக்குகின்ற நேரங்களில் கலவரத்திற்கான மூல காரணத்தைக் கண்டு அதை களைவதே முக்கியமானதாகும். ஒவ்வொரு முறையும் தவறு நடப்பது எங்கெனில் கலவரத்தின் காம்பு கிள்ள நினைக்கிறார்களே ஒழிய அதன் வேர்கள் என்ன என்பதைக் கண்டு களைய கவனம் செலுத்துவது இல்லை என்பதே ஆகும்.

ரகசியமான ஒப்பந்தங்களுக்காக பிரச்சினைகளுக்கு முற்றிலும் தவறான முடிவை அரசு எடுப்பதும். அதை செயல்படுத்துவதும் கேவலமானதாகும். அப்படி அவர்கள் நடவடிக்கை அமையும் பட்சத்தில் அது பிரச்சினைகளுக்கான தொடக்கப்புள்ளியாக அமையுமே அன்றி முற்றுப்புள்ளியாகாது.

இலங்கையில் நடக்கும் உள்நாட்டுப்போர் ஒவ்வொரு முறையும் அந்த அரசு எடுக்கும் தவறான முடிவுகளால் மக்களுக்கு எதிராகவே அமைகின்றது.

விடுதலைப்புலிகள் அமைதியின் பக்கம் இல்லாமல் வன்முறையை கையில் எடுக்கின்றனர் என்று சொல்லுகின்றவர்கள் எல்hம் இலங்கை அரசு எடுத்திருக்கும் முடிவுகளையும் அதனால் விளைந்த உயிர் நாசங்களையும் ஆராய்வதன் மூலம் யார் அமைதிக்கு எதிரானவர்கள் யார் அழுகின்ற குழந்தையை ஆற்றுப்படுத்தாது நரமாமிசம் கேட்கும் அரக்கனின் பக்கம் நிற்கின்றனர் என்பதை அறிய முடியும்.

பிரச்சினைகளின் மூல காரணங்களை அறியாமல் அதற்கான தீருவைப் பற்றி சிந்திப்பது என்ன விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை இலங்கையில் நடந்த போரின் கடைசி சில மாதங்களில் நடந்த கொடூரங்களே சாட்சி.

மருத்துவத்தில் இருந்து கிடைத்த பாடம்.

காய்ச்சல் என்பது உடம்பில் ஏற்படக்கூடிய கிருமிகளின் அச்சுறுத்தலுக்கு தானாகவே மனிதனின் நோய் எதிர்ப்பு செய்துகொள்ளும் தயார் நிலை என்று கூறுகின்றனர். அது பக்டீரியாக்களாலும் அல்லது வைரஸ் கிருமிகளாலும் ஏற்படாலம். கார்ள்வுண்டேர்ளிச் என்பவர் காய்ச்சல் என்பது ஒரு ?நோய்இல்லை என்றும் உடம்பு நோயை எதிர்கொள்ளுகின்ற தருணமே காய்ச்சல் என்றும் விளக்கம் தருகின்றார். நல்ல ஒரு மருத்துவர் நோய்க்கான காரணத்தை அறிய முற்படுவாரே ஒழிய நோயின் அறிகுறி என்ற என்பதை ஆராய மாட்டார்.

இலங்கையின் நோய்60 ஆண்டுகளுக்கும் மேலாக நடக்கும் அரச பயங்கரவாதம் வேர்கள் களையப்படும்வரை எதிர்ப்புக்குரல் மேலும் மேலும் அதிகமாக வலுவானதாக ஓங்கி ஒலித்துக்கொண்டே இருக்கும்.
மனித குலத்தின் மாண்புகள் எல்லாம் முன்பே அழிந்துவிட்டது.

பிபிசி இலங்கை அரசின் வற்றிக்கொண்டாட்டங்களைக் காட்டிக்கொண்டு தமிழ் மக்களய் போர்முனையில் தவிப்பதைப்பற்றி ஏதும் பேசாமல் இருந்தபோது மனித உயிர்களுக்கான மாண்பு கருணை என்பதெல்லாம் இந்த உலகத்தை விட்டு போய்ப் பல நாள் ஆகிவிட்டதோ என்று எண்ணத் தோன்றுகின்றது.

இந்த உலகில் வெறும் தலையை மட்டுமே வைத்துக்கொண்டு இதயம் இல்லாத மக்களிடமிருந்து கருணையையும் அமைதியையும் எதிர்பார்க்கமுடியாது.

மனித உயிரின் மாண்பறிந்து அரச பயங்கர வாதிகளை எதிர்க்கும் இராஜதந்திரிகளின் தேவை அவசியமாகின்றது.

தமிழர்களின் கதை.

தமிழர்கள் தனக்கென்று தனி அரசமைத்து அந்தத்தீவில் வாழ்ந்தவர்கள் பிரிட்டி~;காரர்களின் வருகைக்குப்பிறகு அவர்கள் அரசிழந்து சிங்களவர்களும் தமிர்களும் ஒன்றாயினர்.

பிரிட்டிசார் அந்த தீவைவிட்டு வெளியேறியபோது இலங்கை என்னும் ஒரு நாடாக விட்டுவிட்டுச்சென்றனர். இதில் துரதிஸ்டம் என்னவென்றால் இலங்கையின் அரசை தீர்மானிக்கும் சக்தியாக அங்கே அதிகமாக உள்ள சிங்கவர்கள் ஆனதுதான்.

ஆட்சிக்கு வரும் சிங்களவர் புத்த பிட்சுகளின் சொற்படி நடந்தனர். பெரும்பான்மை மக்களான சிங்களவர்கள் ஆதரவைப் பெற்று ஆட்சிக்கட்டிலில் நீடிக்க அவருகள் தமிழர்களுக்கு எதிரான செயல்களில்

Source & Thanks : yarl

Leave a Reply

Your email address will not be published.